"காதல் 'மனைவி' முகத்த கடைசியா பாக்க விடல"... இது எல்லாத்துக்கும் 'அவங்க' மட்டும் தான் காரணம்... 'ஃபேஸ்புக்' பதிவுடன் உருக்கமான முடிவு எடுத்த 'இளைஞர்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். 25 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த தொடக்கத்தில், இருவரும் முதலில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பவித்ரா கணவரை பிரிந்து, கடந்த ஓராண்டாக தனது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
மேலும், விவாகரத்து வேண்டி பவித்ரா நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அரவிந்த் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறும்படி பவித்ராவிடம் கூறி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் பவித்ரா தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த், தனது மனைவியை கடைசியாக காண வேண்டி பவித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், பவித்ராவின் உறவினர்கள் பவித்ராவின் உடலை காண விடாமல் அரவிந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் காதல் மனைவியை கடைசியாக ஒருமுறை காண முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிய அரவிந்த், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்த அரவிந்த், சோகம் தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, அரவிந்தின் தந்தை, 'காதல் மனைவியை பார்க்க முடியாததால் தான் எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேறு எந்த காரணமும் இல்லை' எனக்கூறி புகாரளித்துள்ளார்.
அதே போல, பவித்ராவின் பெற்றோரும், அரவிந்த் அடிக்கடி எங்கள் மகளுக்கு அழைத்து விவகாரத்தை ரத்து செய்து விடும் படி தொந்தரவு செய்ததாகவும், அதன் காரணமாக தான் எனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே வேளை, பவித்ராவின் பெற்றோர்கள் வேறு திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டதாகவும், அதில் பவித்ராவுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அரவிந்த், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது காதல் மனைவி இறந்த போது கூட அவளது உறவினர்கள் முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை, அவள் இல்லாத காரணத்தால் நானும் அவளிடம் போகப் போகிறேன். எங்களது மரணத்திற்கு பவித்ராவின் அப்பா, அம்மா தான் காரணம்' என குறிப்பிட்டு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பெண்ணின் தற்கொலைக்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த மனைவி உயிரிழந்த போது கூட அவளை பார்க்க மனைவியின் உறவினர்கள் அனுமதிக்காத நிலையில், இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- “புது காதலனுக்கு கிஃப்டா கொடுக்குற?”.. கர்ப்பமாக இருந்த முன்னாள் காதலியை 21 முறை குத்திய நபர்!.. வயிற்றில் இருந்த சிசுவுக்கு நேர்ந்த சோகம்!
- கொரோனா தடுப்பு பணிக்காக... 'சென்னை'யில் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை... எத்தனை 'கோடி'கள் தெரியுமா?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'நைட் 1.30 மணி வரை டூட்டி'... 'பார்க்கிங்யில் துடிக்க துடிக்க கிடந்த இளம் மருத்துவர்'... சென்னையை அதிரவைத்துள்ள சம்பவம்!
- 'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்!
- தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- 'சென்னையில்' கொரோனா 'உச்சகட்ட' தாண்டவம் ஆடிய ஏரியா!.. இப்போ மொத்தமா 'உறைய' வைத்த 'சர்ப்ரைஸ்'!
- 'அடிச்சு பிரிக்க போகுது'... 'இந்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை'... வானிலை ஆய்வு மையம் தகவல்!
- லவ்வர பாக்கணும்,,, "இந்தா பாகிஸ்தான் வரைக்கும் போயிட்டு வரேன்"... 'ஜிபிஎஸ்' உதவியுடன் கிளம்பிய இந்திய 'இளைஞர்'... எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு!!