"எதுக்கு பைக்கை திருடுன?".. போலீசாரின் கேள்விக்கு இளைஞர் சொன்ன பதில்.. ஒரு நிமிஷம் எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பைக்கை திருடிய இளைஞர், காவல்துறையில் சொன்ன காரணம் அதிகாரிகளையே அதிர வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

காணாமல்போன பைக்

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவரான தினேஷ் (வயது 40), ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி தனது இருசக்கர வானத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தனது கடைக்கு சென்றிருக்கிறார் தினேஷ். மீண்டும் இரவு வந்து பார்த்தபோது நிறுத்திய இடத்தில் பைக் இல்லாததால் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் தினேஷ்.

இதனையடுத்து, அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், காணாமல்போன தனது வண்டியின் புகைப்படம் மற்றும் திருடிச் சென்ற நபரின் புகைப்படம் ஆகியவற்றை தனது நண்பர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வாகனத்தை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டிருக்கிறார் தினேஷ்.

சிக்கிய திருடன்

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு அண்ணாநகர் டவர் பார்க் பகுதியில் காணாமல்போன வாகனம் நிற்பதாக தினேஷிற்கு அவரது நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து நண்பர்களுடன் சென்று திருட்டு ஆசாமியையும் பைக்கையும் கையும் களவுமாக பிடித்திருக்கிறார் தினேஷ். இதனையடுத்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து விரைந்துவந்த அண்ணாநகர் காவல்துறையினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பதும் அவர் ஏற்கனவே கொலைவழக்கில் கைதாகி தண்டனை பெற்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்திருக்கிறது. மேலும், தினந்தோறும் அண்ணாசாலை காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டிருந்திருக்கிறார். இதனால் தினமும் பேருந்தில் பயணித்து வந்ததாகவும் அதனால் சோர்வடைந்ததால் பைக்கை திருடியதாகவும் பார்த்தசாரதி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

மேலும், காவல்நிலையத்திற்கு சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு தினந்தோறும் கையெழுத்து போட்டு வந்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஆயிரம் விளக்கு பகுதி காவல்நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

BIKE, THEFT, POLICE, சென்னை, பைக், திருட்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்