கல்யாணமாகி 1 வருஷம் தான்... இரவு-பகல் தொடர்வேலை... கணவரிடம் 'உதவி' கேட்ட மனைவி... மறுத்ததால் விபரீத முடிவு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய கணவரிடம் உதவி கேட்டு அவர் மறுத்த நிலையில் விபரீத முடிவெடுத்துள்ளார்.
ஊட்டியை சேர்ந்த ஹரி கணேஷ்(29) பிரியதர்ஷினி(29) இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. ஹரி கணேஷ் அம்பத்தூரிலும், பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கியில் மேலாளராகவும் பணியாற்றி வந்தார். இருவரும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும் போது கணவர் ஹரிகணேஷிடம், பணியின் காரணமாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் பிரியதர்ஷினி தூங்குவதற்காக தனி அறைக்கு சென்றுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்து ஹரி கணேஷ் கதவை உடைத்து பார்த்தபோது பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் வேலைப்பளு காரணமாக பிரியதர்ஷினி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 வருடம் தான் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அன்பா பாத்துப்பார்னு நம்பி போனேன்.. கழுத்த நெரிச்சு சித்ரவதை செஞ்சு!”... நாட்டிலேயே முதல் முறையாக ‘இப்படி ஒரு வழக்கில்’ கைதான ‘கொடூரன்’!
- அதிர்ச்சி கொடுத்த கோவை 'என்ஜினியர்'... ஷாக்கிங் 'ஆடியோ'வால் போலீஸ்க்கு சென்ற சரத்குமார்!
- Video: அச்சச்சோ என்னாச்சு! 'வேடிக்கை' பார்த்த இளைஞரை... எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ் 'வைரலாகும்' வீடியோ!
- “முதலிரவை தவிர்த்துக் கொண்டே வந்த அமெரிக்க மாப்பிள்ளை!”.. உறையவைத்த காரணம்.. அதன் பின் புதுப்பெண்ணுக்கு கணவர் போட்ட ‘அரளவைக்கும்’ கண்டிஷன்!
- “அடிக்கடி ஒரு பொண்ணு வரும்.. வீட்டுக்கு பின்னாடி மர்ம குடோன்!”.. 2007 சிறுமி காணாமல் போன வழக்கில் மிரளவைக்கும் திருப்பம்!
- 'ரூபாய் 15 கோடி' இது வெளியில கசியக்கூடாது... நம்ம விசாரணை எல்லாம் 'பாழா' போயிரும்... லீக்கான 'வீடியோ'வால் அதிர்ச்சி!
- நடிகர்கள் விமல், ’பரோட்டா’ சூரி மீது ’போலீசார்’ வழக்கு பதிவு - என்ன நடந்தது?
- 'நெருக்கமான' படங்களால் சர்ச்சை... பிரபல நடிகையின் 'தந்தை'யிடம்... இரண்டரை மணி நேரம் 'போலீஸ்' விசாரணை!
- அந்த 'படத்தை' 30 தடவைக்கு மேல பார்த்தேன்... இளம்பெண்களிடம் பணம், நகை மோசடி... 'சிக்கிய' இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
- தந்தையின் இறுதிச்சடங்குக்கு 'மாலை' வாங்கச்சென்ற மகன்... விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்... அடுத்தடுத்த 'மரணங்களால்' ஆடிப்போன குடும்பம்!