‘பாயாசத்தில் மயக்க மருந்து’.. கோயிலில் சாமி கும்பிடும்போது ஏற்பட்ட பழக்கம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை ராயபுரத்தில் வசித்து வருபவர் மூதாட்டி கனகாம்பாள் (வயது 85).  இவர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் போது பத்மாவதி (வயது 55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மூதாட்டியை கோயிலுக்கு வருமாறு பத்மாவதி அழைத்துள்ளார்.

அப்போது தனக்கு திருமண நாள் என்றும், ஆசீர்வதிக்கும்படியும் மூதாட்டியிடம் பத்மாவதி கூறியுள்ளார். பின்னர் அவருக்கு பாயாசம் கொடுத்துள்ளார். அந்த பாயாசத்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூதாட்டி மயங்கி விழுந்து விட்டார். இதனை அடுத்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச் செயின், வளையல்களை திருடிக்கொண்டு பத்மாவதி தப்பியுள்ளார். மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தபோது நகைகள் திருடு போனதைக் கண்டு கனகாம்பாள் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டி கனகாம்பாளை பத்மாவதி அழைத்து வந்தது பதிவாகியுள்ளது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உடல்நலம்குன்றி இருக்கும் தனது கணவனுக்காக அனைத்து நகைகளையும் அடகு வைத்து விட்டதாகவும், அந்த நகையை மீட்டுவதற்காக திருட்டில் ஈடுபட்டதாகவும் பத்மாவதி கூறியுள்ளார். அதற்காக பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து மூதாட்டிக்கு கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, WOMAN, STEALS, GOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்