VIDEO: ‘ஓடு... ஓடு.. எப்படியாவது உயிரை காப்பாத்தியாகணும்’!.. கடவுள் மாதிரி வந்த பெண் காவலர்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கல்லறையொன்றில் மயங்கிய நிலையில் கிடந்த நபரை பெண் காவல் ஆய்வாளர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று (11.11.2021) மாலை புயல் கரையை கடக்க உள்ளதால், காற்றின் வேகம் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சாலைகளில் ஆங்கங்கே மரங்கள் வேருடன் சாய்துள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களை அப்புறப்படுத்தும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மரம் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர், தொடர் கனமழை காரணமாக மயங்கிக் கிடந்துள்ளார். முதலில் இறந்துவிட்டார் எனக் கருதி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது உதயா மயக்க நிலையில்தான் உள்ளார் என்பதை அறிந்த அவர், உடனே தனது தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினார். இதனை அடுத்து ஆட்டோ வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது, ‘எப்படியாவது உயிரைக் காப்பாத்தியாகணும்..ஓடு..ஓடு’ என காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

HEAVYRAIN, RAIN, POLICE, TAMILNADUPOLICE, CHENNAIRAINS, TNRAINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்