‘என் தங்கச்சி காணாமல்போய் 4 நாள் ஆச்சு’.. ‘யாராவது பாத்தா சொல்லுங்க’.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்குன்றம் அருகே குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் அருகே வடிவேல் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அம்பிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி காலை விஜயகுமாருக்கும், அம்பிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக்கொண்டு அம்பிகா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அம்பிகா காணாமல் போனது குறித்து உறவினர்களுக்கு விஜயகுமார் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். காலை 11.50 மணி முதல் அம்பிகாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்பிகா காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அம்பிகாவின் சகோதரர் சரவணன் கூறுகையில், ‘என் தங்கை காணாமால்போய் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களில் யாருக்காவது அம்பிகா பற்றி தெரியவந்தால் 6382367007 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
News Credits: PuthiyaThalaimurai
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்!
- ‘சுடிதாருடன் மிதந்த சடலம்’.. பெண்ணா?.. திருநங்கையா?.. வேலூர் கோட்டையை அதிரவைத்த சம்பவம்..!
- குடித்துவிட்டு 'சண்டை' போட்ட கணவர்... இரண்டு 'குழந்தைகளுடன்' மனைவி எடுத்த 'விபரீத' முடிவு!
- ‘பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட’... ‘அத்தியாவசிய பொருட்கள் கடைகளும் மூடப்படுகிறதா?... ‘சென்னை மாநகராட்சி ஆணையர் வார்னிங்’!
- 'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்!'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்!
- “தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்!
- 'சொந்தம் விட்டு போக கூடாது தான்'...'சொந்தக்காரங்க வந்தா என்ன பண்றது'?... சுகாதார துறை அதிகாரி விளக்கம்!
- "ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்..." என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...