'இப்டி பண்ணுவான்னு கனவுல கூட நெனைச்சு பாக்கல'.. 'புள்ளைங்கள விட்டுட்டாளே’.. கதறிய கணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கூலி வேலை பார்த்து வரும் ஏழுமலையின் மனைவி காத்தாயி என்பவரும், காத்தாயியின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து வேலைபார்த்துவரும் பாபு என்கிற கொத்தனாரும், தகாத உறவில் இருந்ததாக ஒரு கட்டத்தில் ஏழுமலைக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் பாபுவின் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று ஏழுமலை, தன் மனைவியை எச்சரிட்துள்ளார். இதேபோல் பாபுவிடமும், தன் மனைவியிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்க்கமாகக் கூறியுள்ளார். ஆனாலும், ஏழுமலைக்குத் தெரியாமல், காத்தாயி பாபுவின் வீட்டுக்குச் செல்வதும், வருவதுமாக இருந்துள்ளார்.
இதையறிந்த ஏழுமலை மீண்டும் காத்தாயியினை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுக்கு பின் வீட்டிற்கு ஏழுமலை வந்தபோது, அங்கு காத்தாயியினைக் காணவில்லை. இதனால் காத்தாயியைத் தேடிக்கொண்டு ஏழுமலை பாபுவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போதுதான், காத்தாயியும் பாபுவும் ஒரே அறையில் ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
ஏழுமலை- காத்தாயி தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்க, ஏற்கனவே திருமணமாகிய பாபுவுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கனவில் கூட, தன் மனைவி காத்தாயி இவ்வாறு செய்வார் என்று தான் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் இரு பிள்ளைகளை விட்டுவிட்டு போய்விட்டார் என்றும் ஏழுமலை புலம்பியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சினிமாவையே மிஞ்சிட்டீங்க'...' சென்னை'யில் மாணவர்கள் செய்த அட்டூழியம்' ... வைரலாகும் வீடியோ!
- ‘200 நாட்கள் கழித்து சென்னையில் பெய்த மழை..’ பிரபல கிரிக்கெட் வீரரின் ஹேப்பி ட்வீட்..
- ‘ஓனரை திசை திருப்பி நகை சுருட்டிய இரு பெண்கள்’.. சென்னையில் நடந்த பலே திருட்டு சம்பவம்!
- 'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு!
- 'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் !
- 'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'!
- '11.5 லட்சம் ரூபாய்..'.. 'ஆனா அந்த பெண்மணி இத செஞ்சுருக்கணும்'.. சென்னையில் பரபரப்பு!
- 'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'!
- ‘இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்..’ பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
- 'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'!