43 சவரன் நகைகளை குப்பையில் வீசிய பெண்.. அதிர வைத்த சிசிடிவி காட்சி.. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் அதன் ஏடிஎம் மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 1969'ல பள்ளி மாணவி எழுதிய கடிதம்.. Future பத்தி இருந்த வேற லெவல் விஷயம்.. வியந்து பார்க்கும் மக்கள்

இந்த வங்கியில், காவலாளியாக கோதண்டம் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில், ஏடிஎம் மையத்திற்குள் அவர் சென்று பார்த்த போது, அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் கைப்பை ஒன்று கிடந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், அந்த பையை திறந்து பார்த்த போது, அதற்குள் ஏராளமான நகைகள் இருப்பதை பார்த்து கோதண்டம் ஒரு நொடி அதிர்ந்து போயுள்ளார்.

குப்பைத் தொட்டியில் 43 சவரன் நகை

ஏடிஎம் மையத்துக்குள் யார் இப்படி நகைகளை உடைய பையை போட்டு சென்றிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் இருந்த கோதண்டம், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், 43 சவரன் நகை இருந்த பையை மீட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி

அதே போல, ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் சோதனை செய்துள்ளனர். அதன் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமார் 35 வயது மதிப்புள்ள பெண் ஒருவர், ஏடிஎம் மையத்தின் கதவைத் திறந்து, அதற்குள் இருந்த குப்பைத் தொட்டியில் நகை பையை போட்டு விட்டுச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

தொடர்ந்து, அந்த பெண் யார் என்பது குறித்த விசாரணையையும் போலீசார் தொடங்கி உள்ளனர். ஏடிஎம் சம்பவம் நடந்த சமயத்தில், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள், 35 வயதாகும் தங்களின் மகளைக் காணவில்லை என வாய் மொழியாக போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், அவர் பின்னர் வீட்டிற்கு  வந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

35 வயது பெண் செய்த காரியம்

இதன் பெயரில் போலீசாருக்கு சந்தேகம் வரவே, ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை அந்த பெற்றோர்களிடம் போலீசார் காண்பித்துள்ளனர். அப்போது, நகை பையை குப்பையில் போட்டு விட்டுச் சென்றது தங்களின் மகள் தான் என அந்த பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், 43 சவரன் நகையை குப்பைத் தொட்டியில் தங்களின் மகள் போட்டு விட்டுச் சென்றதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, அதே பெண்ணின் பெற்றோர் தெரிவித்த கருத்தின் படி, அவர் அதிகம் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும் போது, வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. குப்பைத் தொட்டியில் கிடந்த நகை பையை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என செயல்பட்ட காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டவும் செய்துள்ளனர்.

அதே வேளையில், மன அழுத்தம் காரணமாக, சுமார் 43 சவரன் நகை பையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சியால் அதிகம் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Also Read | "இப்ப கெளம்புனா கரெக்ட்டா இருக்கும்.." சாப்பாட எடுத்துக்கிட்டு குதிரையில் கிளம்பிய Delivery ஊழியர்.. காரணம் என்ன??

CHENNAI, CHENNAI NEWS, WOMAN, GOLD, ATM, ATM DUSTBIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்