3 மாசத்துக்கு முன்னாடி தான் பழக்கம்.. கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சென்னை பெண்.. காதல் ஸ்டார்ட் ஆனது எப்படி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ஏற்பட்ட காதலால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை உதறிவிட்டு இளம்பெண் ஒருவர் வாலிபரை பிடித்து உள்ளார்.

Advertising
>
Advertising

சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகள் ராஜலட்சுமி  (வயது 30). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ராஜலட்சுமி நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து ராஜலட்சுமியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் ராஜலட்சுமியை தேடி வந்தனர். இதற்கிடையே ராஜலட்சுமியின் சகோதரர் சங்கர நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து ராஜலட்சுமியின் செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் கண்காணித்தனர் .அப்போது அவர் கேரளாவில் இருப்பது தெரியவந்தது.

இதனை அறிந்த ராஜலட்சுமி, வாலிபர் ஒருவருடன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் ஃப்ரீ பையர் விளையாட்டை ஆடுவதில் ராஜலட்சுமி ஆர்வமாக இருந்துள்ளார். அப்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காரோடு பகுதியைச் சேர்ந்த மேத்யூ ஜான் (29 வயது) என்பவருடன் ராஜலட்சுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதறிவிட்டு, ராஜலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து கேரள மாநிலம் மூணாறில் உள்ள கோவில் ஒன்றில் நேற்று காலை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் அருமனை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேத்யூ ஜான், கேரளாவில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இரு வீட்டு குடும்பத்தினரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் ஜோடி சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். அதனால் அவர்களை வாழ்த்தி அறிவுரை சொல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பழக்கத்தில் உருவான காதலால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை உதறிவிட்டு வாலிபருடன் இளம்பெண் சென்றப் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, WOMAN, KANYAKUMARI, YOUTH, LOVE, ONLINEGAME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்