‘தீபாவளிக்கு சென்ற தம்பதி’.. ‘காவு வாங்கிய பள்ளம்' கணவர் கண்முன்னே பலியான மனைவி..! சென்னையில் மற்றொரு சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்தவர்கள் ராமதாஸ் (40)-தேவி (35) தம்பதியினர். ராமதாஸ் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். நசரத்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளம் மழைநீரினால் நிரம்பியிருந்ததை அறியாமல் ராமதாஸ் சென்றுள்ளார்.
இதனால் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். அப்போது பின்னே வந்த கண்டெய்னர் லாரி தேவியின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இதுவரை மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், அதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் பேனர் விழுந்ததால் லாரி மோதி இளம்பெண் பலியான நிலையில், சாலையில் இருந்த பள்ளத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்ற போது கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- 'மரத்தில் மோதி'.. 'உடல் கருகி மரணம்' .. 'பேட்டரி காரினால் வந்த வினையா?'!
- 'ஷேர் ஆட்டோவும் பேருந்தும் மோதி கோர விபத்து'.. சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!
- ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘சாலையோரம் சடலமாகக் கிடைத்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘தனியாகச் சென்றபோது’.. ‘மர்ம நபர்களால் நடந்த பயங்கரம்’..
- 'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- 'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'!
- ‘அடுத்த 2 நாட்கள்’... ‘குறையும் மழை’... டெல்டா மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘பைக்கில் சென்ற’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘பயணிகள் வசதிக்காக ஸ்மார்ட் வாட்ச்’.. ‘சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ஐடியா’..