ஒரு 'ரகசியத்த' சொல்ல போறோம்...! 'யாருக்கிட்டேயும் சொல்லிராதீங்க...' 'நாங்க வேலை செஞ்சிட்டு இருந்தப்போ மண்ணுக்கடியில இருந்து...' - அதிர்ச்சியில் உறைந்த பெண்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் மாவு கடையும், பெட்டிக்கடையும் வைத்து தொழில் செய்து வருபவர் ஜெயந்தி. அந்த கடைக்கு வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் அடிக்கடி கூல்டிரிங்ஸ் மற்றும் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

கடந்த பல நாட்களாக மூவரும் அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால், ஜெயந்திக்கு அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி, ஜெயந்தியின் கடைக்கு வந்த மூவர், ஒரு ரகசியம் சொல்கிறோம், அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். மெட்ரோ சுரங்க தோண்டும் பணியின்போது தங்களுக்கு குண்டுமணி அளவு தங்கம் போன்ற பொருள் கிடைத்துள்ளதாகவும், இதை நகைக்கடையில் கொடுத்து சோதனை செய்து தருமாறும் கேட்டுள்ளனர்.

அதன்படி ஜெயந்தியும், அருகில் உள்ள நகைக்கடையில்  சோதித்தபோது 700 மில்லி கிராம் அளவுள்ள உண்மையான தங்க குண்டுமணி எனவும் அதனுடைய மதிப்பு 4,000 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்பின் இரண்டு தினங்கள் கழித்து, மீண்டும் அதே கும்பல் கடைக்கு வந்து தங்களுக்கு மீண்டும் ஒரு குண்டுமணி கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். அதனையும் தங்க நகை கடையில் கொண்டு சோதித்தபோது அது உண்மையான 700 மில்லி கிராம் தங்கம் எனவும் அதனுடைய மதிப்பு 4000 ரூபாய் என்று அதை விற்று பணத்தை வாங்கி அவர்களிடம்  கொடுத்திருக்கிறார் ஜெயந்தி. .

இந்நிலையில் மீண்டும் கடந்த 13-ம் தேதி அவர்கள் மூவரும் ஜெயந்தியிடம், பூமிக்கடியிலிருந்து கிட்டதட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள குண்டுமணிகளான மாலை கிடைத்ததாகவும், தற்போது ஒரு அவசர தேவையாக இருப்பதால் அந்த தங்க குண்டுமணிகளான மாலையை வைத்துக்கொண்டு ரூ.4 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

அடித்தது பம்பர் என எண்ணிய ஜெயந்தி நானே அதை வாங்கி கொள்கிறேன். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி, தன்னிடம் நகை பணம் என மொத்தமாக மூன்று லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆசையாக குண்டு மணி மாலையை, ஜெயந்தி வழக்கம்போல தங்க நகை கடையில் கொண்டு சோதித்த போது, அவை அனைத்துமே இரும்பு குண்டு மணிகள் மீது தங்கம் போன்று முலாம் பூசப்பட்ட போலியான தங்க குண்டுமணிகள் என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்