‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’!.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன்கள் வீட்டில் கேரட், திராட்சை பீர் தயாரித்து விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

சென்னை திருவொற்றியூர் போலீசார் கொரோனா ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.ஜே நகர் குடிசைப் பகுதி அருகே 3 பேர் குடங்களில் இருந்து பிளாஸ்டிக் மக்கில் எதையோ ஊற்றிக்கொண்டு இருந்துள்ளனர். போலீஸ் அங்கே வருவதைப் பார்த்த அவர்கள் உடனே அங்கிருந்து ஓடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த மேரி (54), அவரது மகன்கள் சாலமன், ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்டு விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மேரி மற்றும் அவரது மகன்கள் மது தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி யூடியூப்பை பார்த்து திராட்சை பீர், கேரட் பீர் என வகை வகையாக மதுவை வீட்டிலேயே தயாரித்துள்ளனர். அதிக போதைக்காக அதில் சில ரசாயன மருந்தையும் கலந்துள்ளனர். அதை அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்களில் உள்ள திரவத்தை முகர்ந்து பார்த்தபோது விஷ நெடியுடன் கூடிய கண் எரிச்சல் ஏற்பட்டது.

அவர்களிடமிருந்து 60 லிட்டர் திராட்சை மதுபானத்தை பறிமுதல் செய்துள்ளோம். அதிலிருந்து 100 மில்லி அளவு மதுபானத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். தற்போது சிக்கியுள்ள மேரி சில நாள்களுக்கு முன் கேரட் பீர் தயாரித்த குற்றத்துக்காக பிடிப்பட்டவர். மேரியின் வீட்டின் முன் எப்போதும் கூட்டமாக இருந்தது. அதனால் சந்தேகமடைந்து அங்கு சென்றபோது ஏராளமானவர்கள் மேரியின் வீட்டின் முன் காத்திருந்தனர். போலீசைப் பார்த்ததும் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஒரு டம்ளர் திராட்சை பீரின் விலை 400 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்