வேளச்சேரி 'மேம்பாலத்தை' ரெடி பண்ணுங்க..! சென்னையில் மீண்டும் 'வெளுக்க' போகுது மிகக் கனமழை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீண்டும் தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
>
Advertising

இந்த மாதம் மழை மாதம் என்பது போல எப்போதும் இல்லாத நிலையில் அதிக கற்றழுத தாழ்வு பகுதிகளும், மழை பொழிவும் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்த்த கனமழை சேதாரத்தில் இருந்து மக்கள் வெளிவராத நிலையில் மீண்டும் தமிழகத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரும்

எனவே, இன்று (23-11-2021), தமிழகத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 24-ஆம் தேதி நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா உள்ளிட்ட ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிற தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 25-ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

நவம்பர் 26, 27ஆம் தேதிகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 

CHENNAI, HEAVY RAINS, NOV 26, 27

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்