'இது சும்மா ட்ரைலர் தான்'...'மழை இருக்கானு கேக்காதீங்க'... 'வெதர்மேன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மக்கள் மிகுந்த ஆர்வமுடன் மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.இது சென்னை மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மே மாதம் தொடங்கும் முன்பே கடந்த மாதமே சென்னையில் தண்ணீர் பிரச்னை ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் ஃபோனி புயலால் சென்னைக்கு கடுமையான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் தற்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஃபோனி புயலானது தமிழகத்தை நெருங்காமல் வடக்கு நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் ஏற்கனவே இருக்கும் ஈரப்பதத்தையும் கடற்காற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி நகர்கிறது.இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட இருக்கிறது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் வெளியிட்டுள்ள பதிவில் ''ஃபோனி புயலால் சென்னைக்கு எந்த பயனும் இல்லை.சென்னை முதன்முதலாக 40 டிகிரி செல்சியல் வெப்பத்தை தொட்டுள்ளது.ஆனால் இது வெறும் டிரைலர் தான். இந்த வாரத்தின் இறுதியில் இன்னும் அதிகமாக இருக்கும்.
இன்றும் நாளையும் மேகமூட்டம் இருக்கலாம். ஆனால் ஃபோனி வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால் சென்னை வெப்பக்காற்றில் சிக்கும். சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும்'' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சட்டென்று மாறிய வானிலை அறிக்கை.. ‘வந்த வேகத்தில் யூ டர்ன் அடிக்கிறதா ஃபானி புயல்?’!
- இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
- ‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்!
- அம்மாவைக் கொல்லத் திட்டம்.. லண்டனிலிருந்து வந்த மகன்.. திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
- அடடா..! ஒரு எழுத்துல உலக சாதனையை பறி கொடுத்த சென்னை சென்ட்ரல்!
- 'காதலின் பேரால்’ என்ஜினியரிங் மாணவர்கள் செய்த காரியம்.. கல்லூரி மாணவியின் துணிச்சல்!
- 'கிணற்றுக்குள் விழுந்த குழந்தை'...சூப்பர் ஹீரோவான 'சென்னை பாட்டி'...மெய்சிலிர்க்கும் சம்பவம்!
- ‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!
- இனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்!
- 'புது டிரஸ்க்கு பணமில்லயா?'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்!