'கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா... எப்படி மறைச்சாரு'?.. கணவர் தலையில இருந்து டக்குன்னு விழுந்திருச்சு... மனைவி எடுத்த அதிரடி முடிவு!.. சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). கடந்த 2015 ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் பல வருடம் ராஜசேகரன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி வற்புறுத்தியதை அடுத்து ராஜசேகர் அவருடன் இணைந்து இருந்த போது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்தது. ராஜசேகர் தலையில் முடியில்லாமல் வழுக்கை தலையாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலையில் முடி இருப்பது போல் விக் வைத்து கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தை பதிவிட்டு ராஜசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், வரதட்சணையாக வந்த 58 சவரன் நகைகளை ராஜசேகர் செலவு செய்துவிட்டு வங்கியில் இருப்பதாக கூறி பொய்யாக கூறி வந்துள்ளார்.
இவை அனைத்தும் தனக்கு தெரிந்த உடன் ராஜசேகர் அடித்து துன்புறுத்துவதாக இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் ராஜசேகர், தாயார் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளியிடப்படாத பெண்களின் வீடியோக்கள்!.. செல்போனில் ஒளித்துவைத்து... தோண்ட தோண்ட வெளிவரும்... யூடியூப் சேனலின் கோர முகம்!
- ‘சினிமா, சீரியல் ஆசையில்... சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!!!
- 'லவ் அங்க தான் ஸ்டார்ட் ஆச்சு...' ஸோ மேரேஜும் 'அந்த எடத்துல' வச்சு தான் நடத்தணும்...! - பெர்மிசன் கேட்டு காதல் ஜோடி மனு...!
- கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- அடேய்...! 'காருக்குள்ள என் மனைவி இருக்காங்க...' 'காரை திருட வந்த நபர்கள்...' 'போயிட்டு வர கேப்ல...' - பதறிய கணவன்...!
- பைக்ல என்ன வச்சுருக்கீங்க...? 'செக் பண்ணி பார்த்தப்போ, உள்ள...' - கடத்தலுக்கு பின்னால் இருந்த அதிரடி திட்டம்...!
- இது ‘வேறலெவல்’ ஐடியாவா இருக்கே.. திருட வந்த கொள்ளையர்களுக்கு ‘தண்ணீ’ காட்டிய சென்னை இல்லத்தரசி..!
- ‘சார் அந்த டிசைனை காட்டுங்க’!.. அசந்த நேரத்தில் பெண்கள் பார்த்த வேலை.. சென்னையில் நடந்த துணிகரம்..!
- "சரி, உங்க இஷ்டப்படியே அந்த 'பொண்ணு' கூட வாழலாம்... ஆனா ஒரு 'கண்டிஷன்'..." தடம் மாறிய 'கணவர்'... பதிலுக்கு 'மனைவி' கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்!!!