சென்னையில் விடாமல் கொட்டி தீர்த்த 'பேய்' மழை...! '2015-க்கு அப்புறம் ஒரு காட்டு காட்டிடுச்சு...' இன்னும் 'கனமழை' தொடருமா...? - தமிழ்நாடு 'வெதர்மேன்' ரிப்போர்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சென்னையில் விடாமல் கொட்டி தீர்த்த 'பேய்' மழை...! '2015-க்கு அப்புறம் ஒரு காட்டு காட்டிடுச்சு...' இன்னும் 'கனமழை' தொடருமா...? - தமிழ்நாடு 'வெதர்மேன்' ரிப்போர்ட்...!
Advertising
>
Advertising

குறிப்பாக, நவம்பர் 9-ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Chennai weatherman report heavy rains for next 3 days

இந்த நிலையில், நேற்று (06-11-2021) இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஒவ்வொரு இடியும் 10 முதல் 15 வினாடிகள் நீடிக்கும் பேரிடியாக விழுந்தது. அதிகபட்சமாக சென்னையில் 20 செ.மீ மழை பதிவானது. மேலும், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் காரணத்தால், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைமற்றும் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி

1913
04425619206
04425619207
04425619208

9445477205  எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

CHENNAI, WEATHERMAN, RAINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்