சென்னை : புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல் துறை.
உலக நாடுகள் பலவற்றில் தற்போது ஒமைக்ரான் என்னும் தொற்று, மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும், நாளை மறுநாள் புத்தாண்டு தினம் என்பதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல நாடுகள், மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்திலும், புத்தாண்டு தினத்தையொட்டி, தனியார் விடுதிகள் மற்றும் கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு நிகழ்ச்சிக்கு தடை
இதுகுறித்து, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர், சென்னையில் 31.12.2021 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து சில கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை வெளியிட்டிருந்தார். சென்னை பெருநகர் பகுதியில், புத்தாண்டு தினம் கொண்டாட வேண்டி, மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம். அதே போல, மெரினா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரை மற்றும் இதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடு
கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல சாலைகளில், வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றுமம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், கிளப்புகள், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட எந்த இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட வேண்டி மக்கள் கூட வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றையும் அறிவித்துள்ளது.
வாகனத்தில் செல்ல தடை
சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை இரவு 12 மணி முதல ஜனவரி ஒன்றாம் தேதி, காலை 5 மணி வரை, அத்தியாவசிய தேவைக்கான வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மற்ற எந்த வித வாகனங்கள் சாலையில் செல்லவும் அனுமதியில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால், மக்கள் அனைவரும் 12 மணிக்கு முன்பாகவே, தங்களின் பயணங்களை முடித்துக் கொள்ளும் படி அறிவுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குடும்பத்துடன் திருத்தணி சென்ற பெண் காவலர்.. உடைந்து கிடைந்த வீட்டின் கதவு.. சென்னையில் நடந்த துணிகரம்..!
- வேகம் எடுக்கும் கொரோனா.. நெருக்கடியில் சென்னை.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்
- நான் இனிமேல் அம்மா கிடையாது செல்லம், 'அப்பா' சரியா? 2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆணாக மாறிய பெண்
- என்னால அந்த வீட்ல வந்து 'வாழ' முடியாதுங்க...! 'வெளியே நின்னுட்டு இருந்த ஸ்கூட்டி...' - உச்சக்கட்ட கடுப்பில் கணவன் செய்த காரியம்...!
- சென்னையில் நடந்த முக்கியமான மாற்றம்.. 2017 to 2022.. வீதிகளும்.. வீடுகளும்!
- இன்ஸ்டா, பேஸ்புக்ல 'ஃபோட்டோ' போடுற பொண்ணுங்க தான் டார்கெட்...! - 'போலி விளம்பரம்' செய்து இளம்பெண்களை மோசடி செய்த நபர்...!
- சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து! மக்கள் கண்ணீர்.. என்ன நடந்தது?
- New Year : புதுச்சேரி வரும் சன்னி லியோன்.. 18 வயசுக்கு மேலே இருந்தால்தான் அனுமதி.. கூடவே ஒரு கண்டிசன்
- "உங்க வாழ்க்கையே மாறப் போகுது.." நம்பி ஏமாந்த 150 பேர்.. "ஆட்டைய போட்டது மட்டும் இத்தன கோடியா??.." பகீர் 'ரிப்போர்ட்'...
- ‘பாயாசத்தில் மயக்க மருந்து’.. கோயிலில் சாமி கும்பிடும்போது ஏற்பட்ட பழக்கம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!