கொரோனா தாக்கியதால், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கி தமிழகத்தில் சில பிரபலங்கள் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த துயரங்களை பார்க்கும் பொழுது பணம் படைத்தவர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்விதான் அனைவருக்கும் எழுந்துள்ளன. முன்னதாக திமுக எம்.எல்.ஏ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்டோர் கொரோனா தாக்கி சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி கொரோனா தாக்கி பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தயாரிப்பாளரும் வாகினி ஸ்டூடியோவின் நிறுவனருமான நாகி ரெட்டியின் மகன், விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன்தான் இந்த சரத் ரெட்டி.

தற்போது 52 வயதான இவர் கொரோனா வைரஸ் தாக்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்தனர்.

இதேபோல் சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண்சாமி பாலகிருஷ்ணனும் கொரோனா தாக்கி உயிரிழந்தார். சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 12 ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் சென்னை ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்றவர் என்பதும், இதற்கு முன்னதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை அடுத்து தங்களது சொத்து போன்று இருந்த ஒருவரை இழந்துவிட்டதாக சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்