'பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த 'தினகரன்'... 'அவர் போட்டியிடும் தொகுதி'... வெளியானது அமமுக வேட்பாளர் பட்டியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்ட நிலையில் தற்போது 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே அமமுக, தேமுதிகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மார்ச் 12-ம் தேதி அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இல்லாமல் அவர் கோவில்பட்டியைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் களம் காண்கிறார். தேர்தலுக்குப் பின்னர் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றாக இணைவோம் எனத் தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பல லட்சம் செலவில் கண்டெய்னரில் பணிமனை'... 'தினமும் வீடு வீடாக பிரச்சாரம்'... மொத்த கனவையும் தகர்த்த தொகுதி பட்டியல்!
- 'சென்னையில் பொய்த்துப்போன எதிர்பார்ப்பு'... 'தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்'... வெளியான முழு பட்டியல்!
- 'இங்க ஒரு தொகுதியில் கூட பாஜக ஜெயிக்காது'... 'தமிழ்நாட்டில் நீங்க இத தான் செஞ்சிருக்கணும்'... பரபரப்பை கிளப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி!
- 'கல்யாணம் கூட பண்ணிக்கல'... '5 கோடி வர செலவு பண்ண ரெடி'... 'திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்த அரசு ஊழியர்'... ஷாக் கொடுத்த கலெக்டர்!
- 'சசிகலா என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா'?... முதல் முறையாக மனம் திறந்த சீமான்!
- ‘விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை’!.. அதிமுக கூட்டணி கட்சிகள் சொன்னது என்ன..?
- 'உங்களுக்கு யாருங்க அங்கீகாரம் கொடுத்தா'?... 'வார்த்தைகளை பார்த்து பேசுறது நல்லது'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
- ‘பரபரக்கும் அரசியல் களம்’!.. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்?.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
- 'தேமுதிகவிற்கு இன்னைக்கு தான் தீபாவளி'... 'அதிமுக டெபாசிட் கூட வாங்காது பாருங்க'... எல்.கே. சுதீஷ் பரபரப்பு பேச்சு!
- 'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!