'திடீர்னு நெஞ்சை புடிச்சிட்டு கீழ விழுந்தாரு'...'பதறிய சக காவலர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு பணியிலிருந்த காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் எனப் பல அரசுத் துறை அதிகாரிகள் தன்னலமின்றி பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக இருப்பவர் அருண் காந்தி. இவர் சாந்தோம் பகுதியில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மதியம் 3 மணி அளவில், அருண் காந்தியின் உடல் முழுவலும் திடீரென வியர்த்துள்ளது. சிறிது நேரத்தில் நெஞ்சு வலிக்கிறது எனக் கீழே சரிந்துள்ளார்.
அருண் காந்தி கீழே சரிவதைப் பார்த்த சக காவலர்கள் பதறிப் போய் அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. காவலர் அருண் காந்தியின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காவலர் அருண் காந்தியின் மறைவு சக காவலர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிறுமியை' பாலியல் பலாத்காரம் செய்ததாக... வாலிபரை 'ஜெயிலுக்கு' அனுப்பிய தந்தை... அடுத்தடுத்த 'ட்விஸ்ட்டால்' அதிர்ந்து போன போலீசார்!
- 16 வயது 'சிறுவனுடன்' திருமணத்துக்கு மீறிய உறவு... கணவர் 'கண்டித்ததால்' விபரீத முடிவெடுத்த இளம்பெண்!
- 'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...
- ‘கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் குட்பை’... ‘இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’... ‘வானிலை மையம் தகவல்’!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- இந்தியாவில் 'கொரோனா' பாதிப்பு அதிகமாவதால்... 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட வாய்ப்பு? ... மாநில முதல்வர்களுடன் 'பிரதமர்' முக்கிய ஆலோசனை!
- 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...
- சென்னையில் மொத்தமாக 'எத்தனை' பேருக்கு கொரோனா?... 'எந்தெந்த' பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 'பாதிப்பு?'... 'சென்னை' மாநகராட்சி 'தகவல்'...
- 'புதிதாக பாதிப்புகள் எதுவும் இல்லை' ... 'இந்தியா'வுக்கே முன்னோடியாக விளங்கும் "அதிசய" மாவட்டம்! ... 'கொரோனா'வை கட்டுப்படுத்தியது எப்படி?
- 'முழுமையாக' நீக்கப்பட்ட 'லாக் டவுன்'... 'அறிகுறிகள்' இல்லாமலேயே ஏற்படும் 'பாதிப்பால்'... 'கவலை' தெரிவிக்கும் 'நிபுணர்கள்'...