VIDEO: ‘இறந்துட்டார்ன்னு நெனச்சுதான் தூக்குனோம்.. அப்பறம்தான் தெரிஞ்சது..!’ மக்கள் மனதை வென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பேட்டி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கல்லறை ஒன்றில் மயங்கி கிடந்த இளைஞரை காப்பாற்றியது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதேபோல் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மீட்புப்பணிகளில் மாநகராட்சி ஊழியர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
அந்த வகையில் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் உதயா என்ற இளைஞர் மயக்கமடைந்து கிடந்துள்ளார். முதலில் அவர் இறந்துவிட்டார் என கருதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞர் உதயாவை தூக்கியுள்ளார். அப்போது அவர் மூச்சு விடும் சத்தம் கேட்கவே, உடனே தனது தோளில் தூக்கி மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இளைஞர் உதயாவை காப்பாற்றியது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறத்திக் கொண்டிருக்கும்போது, கல்லறையில் ஒன்றில் வாலிபர் சடலம் இருக்கிறது என போன் வந்தது. உடனே நானும் காவலர் அய்யனாரும் அவரது பைக்கில் வேகமாக அங்கு சென்றோம். அங்கு சுவர் ஓரமாக அந்த இளைஞர் சடலம் போல் கிடந்தார். இறந்துவிட்டார் என்று நினைத்து நானும் காவலர் அய்யனாரும் அவரை தூக்கினோம்.
அப்போது அவர் மூச்சு விடும் சத்தம் கேட்டது. உடனே அவரை எப்படியாவது காப்பாத்தி விடவேண்டும் என தோளில் தூக்கிக்கொண்டு போனேன். அப்போது ஜீப் சம்பவ இடத்துக்கு வந்துட்டது. ஆனால் அதற்கு முன்பே காவலர் ஒருவர் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்துவிட்டார். அதனால் உடனே ஆட்டோவில் ஏற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து இளைஞரை காப்பாற்றினர்’ என காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (12.11.2021) காலை இளைஞர் உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கே.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘இந்த தடவை உஷார் ஆயாச்சு’!.. பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள்.. சென்னையில் இது எந்த இடம்னு தெரியுதா..?
- சென்னையில் பல பகுதிகளில் ‘கரெண்ட் கட்’.. என்ன காரணம்..? மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்..!
- ‘சென்னைக்கு அருகே கரையை கடக்கும் புயல்’!.. மறுபடியும் ‘கனமழை’ பெய்யுமா..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ‘புதிய’ தகவல்..!
- VIDEO: ‘ஓடு... ஓடு.. எப்படியாவது உயிரை காப்பாத்தியாகணும்’!.. கடவுள் மாதிரி வந்த பெண் காவலர்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- ‘கேப்பே விடாமல் வெளுக்கும் மழை’!.. சென்னை மக்களுக்கு ‘வெதர்மேன்’ சொன்ன முக்கிய தகவல்..!
- ‘பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்’!.. சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- சென்னையில் இன்னும் எத்தனை நாளைக்கு மழை நீடிக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குனர் ‘முக்கிய’ தகவல்..!
- ‘விட்டுவிட்டு வெளுக்கும் மழை’!.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை மையம் தகவல்..!
- 2015-க்கு பிறகு ‘சென்னையில்’ பதிவான அதிகபட்ச மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு ‘மழை’ நீடிக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்..!
- எல்லாரும் சேர்ந்து 'நாடகம்' ஆடிட்டாங்க...! 'வெளியாகியுள்ள முக்கிய சிசிடிவி காட்சி...' ஆர்யன் கான் வழக்கில் 'சினிமா திரைக்கதை'ய மிஞ்சும் அளவிற்கு 'அதிரடி' திருப்பம்...!