'சென்னை மக்களே இதுக்கு நாம பெரும படணும்'... 'லண்டன், பீஜிங் நகரங்களை பின்னுக்கு தள்ளிய சென்னை'... உலக அளவில் சென்னை தான் டாப்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப குற்றங்களும், அதைச் செய்யும் குற்றவாளிகளும் தங்களின் குற்ற முறைகளை மாற்றி கொண்டே செல்கிறார்கள். அந்த வகையில் குற்றம் செய்பவர்களை கண்டுபிடிப்பதிலும், குற்றம் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராவின் பங்கு என்பது அளப்பரியது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் வழிப்பறி, மற்றும் செயின் பறிப்பு என்பது தினம் ஒரு செய்தியாகவே இடம் பிடித்திருந்தது. இது சென்னை மக்கள் மத்தியில் ஒருவித கலகத்தையே ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் தான் மூன்றாவது கண் என்ற திட்டத்தைக் கையில் எடுத்தார் சென்னையின் முன்னாள் காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன்.
கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, முதலில் முக்கிய சாலைகளின் முக்கியச் சந்திப்புகள், பின்னர் முக்கிய சாலைகள் என சென்னையில் சிறு சிறு சாலைகளிலும் சிசிடிவி சென்றடைந்தது. இதன் பயனாகப் பல குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடித்து கைது செய்தது சென்னை காவல்துறை. அதுபோன்று பல குழந்தை கடத்தல்காரர்களை சிசிடிவி மூலமே பின் தொடர்ந்து கைது செய்தது சென்னை போலீஸ்.
2016-ல் 30,000, 2017-ல் 1 லட்சத்து 35,000, 2018-ல் 2 லட்சத்து 30,000, 2019-ல் 2 லட்சத்து 80,000 என சிசிடிவி கேமரா சென்னை முழுவதும் பரவியது. சென்னை போலீசார் மட்டும் இந்த பணியை மேற்கொள்ளாமல், வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தன்னார்வலர்களின் துணையுடன் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணியினை போலீசார் மேற்கொள்ள வைத்தார்கள்.
இதன்பயனாக சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையுடன் உலகின் நம்பர் 1 பாதுகாப்பு நகரமாகச் சென்னை திகழ்கிறது. ஹைதராபாத்தில் சதுர கிலோமீட்டருக்கு 480 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. டெல்லியில் சதுர கிலோமீட்டருக்கு 289 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.இதில் நாம் பெருமை கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால், லண்டன், பீஜிங் நகரங்களும் சென்னைக்குப் பின்னால்தான் உள்ளது. அதாவது, சென்னையில் 1000 பேருக்கு 25 சிசிடிவி கேமராகள் உள்ளன.
முக்கிய கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் தெரு சந்திப்புகள் போன்றவற்றில் சிசிடிவி பொருத்த வேண்டுமெனச் சென்னை காவல்துறை வலியுறுத்தியதன் விளைவாக, எந்தக் குற்றச் செயல் என்றாலும் ஏதாவது ஒரு கேமராவில் குற்றவாளிகள் சிக்கிக்கொள்வார்கள் என நிலை உருவானது. இதனால் குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்யப்பட்டனர். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் மட்டும் 60 செயின் பறிப்பு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது சிசிடிவி.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், மகேஷ்குமார் அகர்வால், தற்போது உள்ள சிசிடிவி கேமரா வீடியோ மூலம் புகைப்படங்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இது எதிர்காலத்தில் லைல்ஸ்ட்ரீமாக கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களை அந்தக் கணமே எச்சரிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
இன்று சென்னைக்கு உலக அளவில் இந்த பெருமை கிடைக்க முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன். அவரின் இந்த மூன்றாவது கண் என்ற முயற்சியே பலரை தங்களின் வீடுகளில் கூட சிசிடிவி கேமராவை பொருத்த முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இதுகுறித்து பேசிய அவர், ''சிசிடிவி கேமராக்களுக்கு எல்லை இல்லை. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெரிவிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். சிசிடிவி குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிக்க மட்டுமல்ல, நடக்காமல் இருக்கவும் உதவும். எந்த ஒரு குற்றவாளியும் சிசிடிவியை பார்த்தால் குற்றம் செய்ய யோசிப்பார்கள்'' எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த இடத்துல ஒரு ‘மிஸ்டேக்’ இருக்கு.. கூகுளை ‘அலெர்ட்’ பண்ணிய சென்னை மாணவருக்கு அடித்த ‘ஜாக்பாட்’..!
- “வீடாயா இது?”.. 'வீட்டுக்குள் இருந்து வந்த எரிவாயு கசிவு'.. வீட்டை உடைத்துச் சென்ற போலீஸார் கண்ட ‘உறைய வைக்கும்’ காட்சி!
- அரசியலுக்கு வர வலியுறுத்தி.. 'சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்... தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகர்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார்!
- 'எத்தன நியூ இயரை பாத்துருக்கும்'.. ‘இப்படி வெறிச்சோடி கடக்குதே!’.. ஆமா.. சென்னை மெரினா பீச் தான்!
- ‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்!’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்!’
- "காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!
- ஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'தட்டு நிறைய சீர்வரிசை'... 'ஜோராக நடந்த வளைகாப்பு'... 'மூக்கு மேல் விரல் வைத்த உறவினர்கள்'... சென்னையில் நடந்த விசித்திரம்!
- 'கையில பணம் இல்லயா?.. அப்போ கூகுள் பே-ல அனுப்பு!'.. நூதன முறையில் வழிப்பறி!.. 'இது என்னங்க டா புது ட்ரெண்டா இருக்கு?
- தனியா இருக்கும் வீடுதான் ‘டார்கெட்’.. டவுசர், மங்கி குல்லா அணிந்து நோட்டமிட்ட ‘மர்மநபர்’.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..!