'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல?'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக் கடையில், கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறித்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில், தான் வாங்கிய 3 சவரன் தங்கச் சங்கிலி, போலி என்றும், மாவு தடவி விற்கப்படுவதாகக் கூறியும், அவை போலி என்பதை வைத்து தகவல் பரப்பி விடுவேன் என்று மிரட்டியும் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல் நிலை அனுபவத்துக்கு பிறகு , இம்முறை போலீஸாரிடம் தகவல் கூறியிருந்த அந்த நகைக்கடை நிர்வாகம் மீண்டும் அந்த கும்பலின் வருகைக்காக காத்திருந்தபோது, அந்த கும்பலோ இம்முறை 15 பேருடன் மீண்டும் கடைக்கு வந்து, 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது.

அந்த சமயத்தில்தான், தயாராக இருந்த போலீஸார் அனைவரையும் கூண்டோடு பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் 5 பேர் தப்பிவிட்டதால்,  தனசேகர் தலைமையிலான 10 பேர் மட்டும் பிடிபட்டனர். இவர்களை விசாரித்தபோது இவர்களிடம் இருந்து போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், துப்பாகிகள், கார்கள், கத்தி, ரொக்கப் பணம் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ROBBERY, CHENNAI, TNAGAR, JEWELLERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்