'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோயின் பாதிப்பால் ஒரு உயிரைக் கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, ''தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கபட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முறையான சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92 ஆயிரத்து 406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளிலும், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்காக, 560 வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த தேவையான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நான் நேரடியாக தினந்தோறும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு செய்து நிலைமையை கண்காணித்து வருகிறேன்.
கடந்த 100 ஆண்டுகளில் இவ்வுலகம் சந்திக்காத சவாலை நாம் சந்தித்து வருகிறோம். ஆனாலும் இந்த நோயை தமிழகத்திலிருந்து முழுமையாக, அறவே ஒழிக்கப்படும் வரை எங்களுடைய பணி தொடரும். ஆனால் கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு எங்கள் அரசு தயாராக இல்லை'' என முதல்வர் உணர்ச்சி பொங்க பேசினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
- VIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி!'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை!... என்ன காரணம்?
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- 'இப்போ தான் நிம்மதியா வீட்டுக்கு போனோம்'...'மீண்டும் பூதாகரமாக வெடித்த காய்ச்சல்'...78 பேர் பாதிப்பு!
- '4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!!'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு!'... உலக சுகாதார அமைப்பு காட்டம்!
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!
- ‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!
- ‘கொரோனா’ பாதித்தவர்களில் ‘80 சதவீதம்’ பேருக்கு... வெளியாகியுள்ள ‘ஆறுதலான’ செய்தி... ஆனாலும் ‘இது’ அவசியம்...
- 'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?