சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் அதிரடி ‘திருப்பம்’.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் வழங்கும் ஊழியரை கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தெரிவித்த டிக்கெட் கொடுக்கும் ஊழியரான டீக்காராம், தன்னை மர்ம கும்பல் கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளை அடித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். டிக்கெட் கவுண்டரில் இருந்த சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பணம் கொள்ளை போனது.

இதனை அடுத்து டீக்காராம் கொடுத்தது தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் இந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அதிகாலை மனைவியை வரவழைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு, இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள டீக்காராமின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 1 லட்சத்து 32 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சினையால் இவ்வாறு செய்ததாக டீக்காராம் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் நிலைய ஊழியரே பணத்தை கொள்ளை அடித்துவிட்டு மர்ம கும்பல் கொள்ளை அடித்ததாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ROBBERY, CHENNAI, THIRUVANMIYUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்