நான் இனிமேல் அம்மா கிடையாது செல்லம், 'அப்பா' சரியா? 2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆணாக மாறிய பெண்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: இரு குழந்தைகளுக்கு தாயான பெண் ஆணாக மாறி அப்பாவாக மாறிய சம்பவத்தை பெருமிததோடு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்னையில் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து ஆணாக மாறி தன் இரு குழந்தைகளுக்கு அப்பாவாக மாறியுள்ளார். 26 வயதில் திருமணமாகி இரு மகன்களுக்கு தாயான இவர் தன் கணவரிடம் தனக்கு ஆணாக மாறுவதிலேயே விருப்பம் என கூறியுள்ளார்.

முதலில் சம்மதித்த கணவன்:

தன் மனைவியின் உணர்வை புரிந்த கொண்ட கணவரும் மனைவியின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து சில காலங்கள் தோழன் போல பழக தொடங்கி உள்ளார். ஆனால் ஊர் வாய் சும்மா இருக்காது இல்லையா, சமூகத்தினர் காட்டிய வெறுப்பு காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

தற்போது 7 மாதங்கள் கழித்து இருவருக்கும் விவகாரத்து கிடைத்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் இருவரும் இருவரது பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்கள். சம்மந்தப்பட்ட பெண் தான் ஆணாக மாறிய பின் தன்னுடைய பெயரை தருண் என மாற்றியுள்ளார். தன் இரு மகன்களிடம் தன்னை இனி அம்மா என்று அழைக்கக்கூடாது அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொண்ட பிள்ளைகளும் தருணை அப்பா என்றே அழைத்து வருகின்றனர்.

சமூகத்தின் நெருக்கடிகள்

குடும்ப அளவில் சந்தோஷமாக இருக்கும் தருண் இந்த சமூகம் அவருக்கு கொடுத்த நெருக்கடிகள் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

அதில், 'பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாறுவதையோ ஆணாக பிறக்கும் ஒருவர் பெண்ணாக மாறுவதையோ இந்த சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர் மீது என்ன தவறு இருக்கிறது.

இந்த மாற்றம் உடலில் ஏற்படுவது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்? திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நான் ஆணாக மாறியதை உணர்ந்தேன். என்னுடைய ஆண் தன்மையை உணர்ந்த உடனே நான் என் கணவரிடம் தான் முதலில் தெரிவித்தேன் 

அவரும் புரிந்து கொண்டார். என்னை வாடா... போடா என்று அழைக்கும் அளவுக்கு அவரிடம் புரிதல் ஏற்பட்டு விட்டது. இந்த சமூகத்தில் ஆண்கள் சேர்ந்து வாழ்வது ஏற்புடையதாக இன்னும் மாறவில்லை. இதுவே விவாகரத்து வரை எங்களை கொண்டு சேர்த்தது என்றே கூறலாம்.

அம்மா இல்லை அப்பா :

என் குழந்தைகளிடமும்  நான் இனி உங்களுக்கு அம்மா இல்லை அப்பா என்று கூறினேன். இளைய மகன் உடனடியாக எனது உணர்வை புரிந்து கொண்டு டாடி என்று அழைக்க தொடங்கினான். பெரியவனுக்கும் சில நாட்களில் புரிதல் ஏற்பட்டு விட்டது. தற்போது அவனும் டாடி என்றே அழைத்து வருகிறான்.

நாங்கள் என்ன வேற்றுக்கிரக வாசிகளா?

இந்த சமூகம் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட ஏற்றுக் கொள்ளாமல் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எங்களை போன்றவர்களை ஒதுக்கி வைக்க நினைத்து கொண்டு இருக்கிறதோ தெரியவில்லை. நாங்கள் என்ன வேற்று கிரக வாசிகளா? உங்களில் ஒருவர் தானே?. ஒரு நாள் நிச்சயம் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என நான் நம்புகிறேன்' என உணர்ச்சிவயப்பட்டு கூறியுள்ளார் தருண்.

MOTHER, WOMEN, MAN, CHENNAI, பெண், ஆண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்