'முதல் தேர்தலிலேயே இவ்வளவு வாக்குகளா'!?.. 'சென்னை தமிழச்சி பத்மபிரியாவின் அரசியல் எதிர்காலம் என்ன'?.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி முடிவு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா பெற்ற வாக்குகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரவாயல் தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிட்டார்.
நேற்று காலை 8 மணி தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் பெஞ்சமினும் பத்மபிரியாவும் பின்னடைவிலேயே இருந்தனர். காரப்பாக்கம் கணபதி மட்டுமே முன்னிலையில் இருந்து வந்தார். பிறகு அனைத்துச் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அமைச்சர் பெஞ்சமினை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இது, அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 12.2 சதவீதமாகும். நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கணேஷ் குமார் 21,045 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளானது, அந்த தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினின் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர் மொத்தமாக 89,577 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி, 1,21,298 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்மபிரியா, "நாம் (மக்கள் நீதி மய்யம்) மிகக் கடுமையான ஒரு போட்டியை இந்த தேர்தலில் சந்தித்தோம். மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளராக என்னுடைய முதல் தேர்தலில் சுமார் 33 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன்.
இந்த தேர்தல் களத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்கள், அதிகாரிகள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த தேர்தலை முழு மூச்சோடு எதிர்கொண்டேன். மேலும், இதில் எனக்கு துணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி. இது ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது முடிவல்ல... ஆரம்பம் தான்'!.. தேர்தல் முடிவுக்கு பிறகு... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!!
- '20 ஆண்டுகள் கழித்து... தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது பாஜக'!.. முழு விவரம் உள்ளே!
- 'தேர்தல்' தோல்விக்கு பின்னர்.. 'கமல்ஹாசன்' சொன்ன விஷயம்.. வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு!!
- 'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோவை தெற்கு தொகுதி...' 'ரொம்ப க்ளோசா போயிட்ருக்கு...' - தற்போது யாரு முன்னிலை...?
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!
- 'தமிழக தேர்தல் 2021'... 'வெற்றி கணக்கை ஆரம்பிக்கிறதா மக்கள் நீதி மையம்'... கமல் முன்னிலை!
- ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்!.. வலுக்கும் மோதல்... குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி போர்க்கொடி!.. என்ன நடந்தது?
- VIDEO: 'சாந்து பொட்டு... ஒரு சந்தன பொட்டு'... தேர்தல் பிரச்சாரத்தின் போது... 'தேவர் மகன்' சக்தியாக மாறிய கமல்!
- மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கமல்ஹாசன் போட்டியிடும் 'தொகுதி' அறிவிப்பு...! எந்த கட்சிகளுடன் மோதல்...? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!
- 'கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்...' 'உறுதியான கூட்டணி...' - அறிவித்த கட்சியின் தலைவர்...!