‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா?’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லி நகரம் காற்று மாசால் மோசமான நிலையை சந்தித்து வரும் வேளையில், அது தமிழகத்துக்கு பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லி, கடந்த வாரத்திலிருந்து காற்று மாசு அடைந்ததால் தத்தளித்து வருகிறது. அங்கு காற்றின் தர குறியீடு 500-க்கு மேல் உள்ளது. இதனால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டநிலையில், செவ்வாய்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் டெல்லி காற்று மாசு, வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தை அரிதாகவே பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தமுறை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்யாமல், இடைவெளி விட்டிருப்பதால், அடுத்த வாரம் காற்று மாசு ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளார். இது சுமார் காற்றின் தரக் குறியீடு, 200 முதல் 300 வரை இருக்கும் என்பதால், வானம் மங்கலாக இருப்பதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லி அளவுக்கு காற்று மாசு ஏற்படாது என்பதால், அங்குபோல இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று, குழந்தைகள் எதிர்பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டை பாதிக்காது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..
- ‘சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதி’.. ‘18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’..
- ‘சென்னையில் போலீஸாரால் விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!
- 'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே!
- ‘13 வயது சிறுமி கொலையில்’... ‘அத்தை மகன் அளித்த’... 'அதிர்ச்சி வாக்குமூலம்'!
- 'அடுத்த 3 நாட்கள்'... 'லேசான மழை மட்டுமே'... வானிலை மையம் தகவல்!