Video: “அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. 'YouTube' வைரல் பெண் 'கண்ணீர்' பேட்டி! வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்ததை அடுத்து சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் கைதாகினர்.
இது தொடர்பாக அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 23 வயதான ஆசன் பாட்ஷா, கேமராமேன் அஜய் பாபு (24) மற்றும் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக கேள்விகளை கேட்டு பேசி சுமார் 200 வீடியோக்கள் சென்னை டாக்ஸ் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசாரிடத்தில், பேட்டி எடுககப்பட்ட பெண்ணே புகார் அளித்தார். அதன் பேரில் சென்னை டாக்ஸ் சேனலைச் சேர்ந்தவர்கள் கைதாகினர்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு தன் தரப்பில் நடந்தவற்றை பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதில் இந்த பேட்டி பக்கா ஸ்கிரிப்ட் என்று குறிப்பிட்ட அவர், புகார் அளித்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
யார் அந்த பெண்?
புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர். சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார்.
வீடியோ உருவானது எப்படி?
அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள்.
அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்தது யார்? ஏன்?
இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- முதலில் அந்த சேனல் தரப்பில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பதாக தான் உறுதி அளித்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த வீடியோ வைரலான 15 நிமிடங்களில் கமெண்ட் செக்ஷனில் மோசமான கமெண்டுகள் குவிந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் கேட்டபோது சேனலின் தலைமை அதை கேட்டுக் கொள்ளவில்லை என கூறினார்கள். இதனால் என் பெயரை மீட்டெடுக்க அந்த சேனலைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அப்போது என் பெயருடன் சேர்த்து இந்த வீடியோவை வைரல் செய்தார்கள்.
ஆனால் அது தான் இன்னும் மன உளைச்சலாக்கியது. உண்மையில் என்னடா இப்படிலாம் பேச வைக்குறீங்க என்று தான் அந்த வீடியோவில் நான் பேசியிருக்கிறேன். இவை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி நான் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தேன். இந்த புகாரை நானாகவே கொடுத்தேன். காவல்துறை இந்த வீடியோவை நீக்குவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி எதிர்மறையாக பேசி நான் பிரபலமாகிவிட்டேன். இதை வைத்து இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என் பங்களிப்பை தர நினைக்கிறேன்.” என கூறியுள்ளார்.
இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுவரை பார்த்தவர்கள் 7 கோடி பேர்!’.. லேப்டாப்பில் சிக்கிய மேலும் பல வீடியோக்கள்!.. ‘பெண்களுக்கு எதிரான ஆபாச கேள்விகள்’ .. ‘என்ன தண்டனை கிடைக்கும்?’
- ‘சினிமா, சீரியல் ஆசையில்... சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!!!
- அரசியலுக்கு வர வலியுறுத்தி.. 'சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்... தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகர்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார்!
- 'எத்தன நியூ இயரை பாத்துருக்கும்'.. ‘இப்படி வெறிச்சோடி கடக்குதே!’.. ஆமா.. சென்னை மெரினா பீச் தான்!
- "காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!
- "10 நாளா புடிச்சுட்டு இருக்கோம்!".. உயிருக்கு ஆபத்தான ‘ராட்சத பம்பர்’ பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம் மட்டும் இத்தனை லட்சமா? .. “சோதனை தொடரும்!” - சென்னை, கோவை போலீஸார் அதிரடி!
- '12 பேர் பலி!'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு! - முழு விபரம்!
- ‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா?’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்? தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை!
- ‘குவிந்த எதிர்ப்பு!’.. ‘குப்பை கட்டணத்துக்கு குட் பை?’ - மின்னல் வேகத்தில் சென்னை மாநகராட்சியிடம் இருந்து வந்த அடுத்த அறிவிப்பு!
- ‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?