‘தனியாக விட மனமில்லை’... ‘பைரவியை வைத்துக் கொண்டு’... ‘உணவு டெலிவரி செய்யும்’... 'வித்தியாசமான மனிதர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனிதர்களைவிட சிலருக்கு நாய் என்றால் அவ்வளவு பிரியம். அதன்மீது தங்களது உயிரே வைத்து இருப்பார்கள். அவர்களது மனிநேயம் பாராட்டுக்குரியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரேம்.
கடந்த 3 வருடங்களாக ஸ்விக்கி ஆன்லைன் டெலிவரி பாயாக வலம் வரும் இவர், தன்னுடனே நாள் முழுவதும், தனது ஸ்கூட்டியின் முன் பகுதியில் தனது செல்ல நாயான பைரவியை வைத்துக்கொண்டு உணவு டெலிவரி செய்து வருகிறார். வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், சிறு குட்டியாக இருந்த பைரவியை தனியாக வீட்டில் விட்டு செல்ல மனமின்றி, கடந்த ஒரு வருடமாக தன்னுடன் வைத்துக்கொண்டு உணவு டெலிவரி செய்து வருகிறார் பிரேம். தற்போது பைரவிக்கு ஒன்றரை வயது ஆகிறது.
சொல்வதைக் கேட்டு அறிவுடன் நடந்துகொள்ளும் பைரவி, எந்த வாடிக்கையாளரையும் இதுவரை அச்சுறுத்தியதோ, கடித்ததோ இல்லை என்று கூறுகிறார் பிரேம். மழை நேரங்களில் கூட பிரேமுடனே பயணிக்கும் பைரவிக்காக, தனியாக கோட்டும் தைத்து வைத்துள்ளார் பிரேம். பைரு என்று செல்லமாக அழைப்பதாக கூறும் பிரேம், தன்னுடன் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை சென்னையை சுற்றி வலம் வருவதாக தெரிவித்துள்ளார். போகலாம் என்றதும் சமர்த்ததாக, ஸ்கூட்டியின் முன்பக்கம் ஏறி நின்று கொள்கிறது இந்த பைரு என்ற பைரவி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துப்பட்டாவை கட்டிக்கொண்டு விளையாடிய'... '9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!
- ‘ஸ்கூல் நோட் புக்கிலிருந்து’... ‘பேப்பரை கிழித்து’... ‘புகார் கொடுத்த 10 வயது சிறுவன்’... 'பாராட்டுகளை அள்ளிய போலீசார்'... வைரலான போட்டோ!
- ‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!
- 2 மாதங்களாக ‘தொடர் இருமலால்’ அவதிப்பட்டவருக்கு.. பரிசோதனையில் ‘காத்திருந்த அதிர்ச்சி’..
- ‘துண்டான கை’... ‘விரைந்து செயல்பட்ட பெற்றோர்’... ‘நம்பிக்கை கொடுத்த மருத்துவர்கள்’... ‘மீண்டும் இணைந்த சிறுவனின் கை’!
- 'ஹலோ.. நூறா?'.. 'இங்க கொஞ்சம் வந்து, இந்த ஐட்டத்தை வாங்கித் தர்றீங்களா?'.. இளைஞர் கேட்ட 'வேறலெவல்' உதவி!
- ‘வீட்டு முன்பு விளையாடியபோது’... ‘4 வயது சிறுவனுக்கு’... ‘வேளச்சேரி அருகே நடந்த சோகம்’!
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!