‘ஒரே ஒரு டூத் பிரஷ் பில்’.. வெளிவந்த பல வருச மோசடி.. சென்னை சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு ‘ஷாக்’ கொடுத்த ஊழியர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டூத் பிரஷை மாற்ற வந்த வாடிக்கையாளர் பில்லைப் பார்த்து ஊழியர் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். அவரது சூப்பர் மார்க்கெட்டில் கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் கடை உரிமையாளரான சுரேஷின் நம்பிக்கைக்குரியவராக ராஜேஷ் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் டூத் பிரஷை மாற்ற வந்துள்ளார். அப்போது அவரது பில்லில் 5000 ரூபாய் என இருந்துள்ளது. ஆனால், கணினியில் 2500 ரூபாய் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், தவறாக கணக்கு காட்டி மோசடி செய்ததாக ராஜேஷ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 5 லட்சம் ரூபாய் மட்டும் திருடியதாக ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது சுமார் 45 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருடிய பணத்தை திருப்பித்தருவதாக ராஜேஷ் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் திடீரென ராஜேஷ் தலைமறைவானார். இதனை அடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த ராஜேஷை கைது செய்தனர். முன்னதாக ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தில், வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் பில் தொகையில் பாதியளவு தொகையை கணினியில் பதிவு செய்துவிட்டு மீதியை திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தை வேலை பார்த்த கடையில் சாதாரண ஊழியராக ராஜேஷ் வேலைக்கு சேர்ந்துள்ளார். நன்றாக வேலை பார்த்து உரிமையாளரின் நம்பிக்கையை பெற்றதால், அனைத்து கணக்கு பொறுப்புகளும் கிடைத்ததாகவும் அதனைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக திருடியதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் வீடு கார் என சொகுசாக வாழ்ந்து கொண்டு உரிமையாளரிடம் ஏழை போல நடித்துள்ளார் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் பில்லில் மோசடி செய்து ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பைக் நல்லா இருக்கே ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’.. சென்னையில் லிப்ட் தந்த டான்சருக்கு ‘ஷாக்’ கொடுத்த இருவர்..!
- பூட்டி இருந்த காதலி வீட்டின் கதவு.. உடைத்துக் கொண்டு போன காதலனுக்கு.. உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'
- கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
- 'English-ல் சரளமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்'.. அடுத்தடுத்து வச்ச கோரிக்கைகள்.. வியந்த பிரதமர்..!
- வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. திடீரென மயங்கி விழுந்து நேர்ந்த சோகம்..!
- பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை .. இவ்வளோ திட்டங்கள் இருக்கா..? முழு விபரம்.!
- 2 நாளா அப்பா போனை எடுக்கல.. போலீஸுடன் வீட்டுக்கு வந்த மகள்..கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- நிதி நிறுவனத்தில் நடந்த திருட்டு.. அதுக்கு முன்னாடியே திருடர்கள் பாத்த வேலை.. கூடவே அவங்க எழுதுன லெட்டர் தான் செம 'ஷாக்'
- அப்பாவை காணோம் என புகார் கொடுத்த மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சென்னையில் ஷாக்..!
- “அம்மா எங்கே?”.. அண்ணன் கிட்ட தம்பி சொன்ன பதில்.. சென்னையில் நடந்த பரபரப்பு..!