'ரயில்களில் மாணவிகளுக்கு மட்டும் அனுமதி'... 'காலேஜ் ஆரம்பிச்சும் ஒழுங்கா போக முடியல'... பரிதவிப்பில் மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புறநகர் ரயிலில் மாணவர்களுக்கு அனுமதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட ஆரம்பித்து விட்டது. சென்னையைப் பொறுத்தவரை 10,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இங்குள்ள கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.  அதிலும் பெரும்பாலான மாணவர்கள்  திருவள்ளுவர், அரக்கோணம், சிங்கப்பெருமாள் கோவில்,செங்கல்பட்டு, என பல பகுதிகளிலிருந்து பயணம் செய்கின்றனர்.

அந்த மாணவர்களின் பிரதான போக்குவரத்திற்குப் புறநகர் ரயில் சேவையினையே நம்பி உள்ளார்கள். இதனால் அவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு வந்து விடுவார்கள். ஆனால் தற்போது கூட்ட நெரிசல் நேரத்தில் அத்தியாவசிய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மட்டுமே செல்ல முடியும் அதாவது காலை 7.30மணி முதல்9.30மணி வரை, அதேபோல் மாலை 4.30 முதல் 8மணி வரை மற்ற நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதி கிடைக்கிறது.

இதனால் காலை 8.30 மணிக்குக் கல்லூரியில் இருக்க வேண்டிய மாணவர்கள் புறநகர் ரயில் சேவை இல்லாத காரணத்தால் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக ஒரு மாணவர் அரக்கோணத்திலிருந்து சென்னையில் இருக்கும் கல்லூரிக்கு வரப் புறநகர் ரயிலில் ஒன்றரை மணி நேரத்தில் வந்து விடலாம். ஆனால் பேருந்தில் வந்தால் குறைந்தபட்சம் 2.30 மணி நேரம் ஆகும். எனவே கல்லூரி திறக்கப்பட்டத்திலிருந்து மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாகத் தமிழக அரசின் ரயில்வே அதிகாரிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைத்து நேரங்களிலும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்