‘சென்னைக்கு ஒரு குட் நியூஸ்’!.. ‘இன்றுமுதல்’ இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு.. மாநகராட்சி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஒரு சில மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 176 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஆனாலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 28 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளின் பட்டியலை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதில் மண்டலம் 5-ல் மதுரவாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதனால் அந்த பகுதிகளில் இன்று (02.05.2020) முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்