'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் தண்ணீர் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் சில ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெரும் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதனிடையே சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு இந்த பள்ளியையும் விட்டு வைக்கவில்லை.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையின் முறையான அனுமதி பெற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் ''இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அதிகமான விலை கொடுத்தே தண்ணீரை வாங்கும் சூழ்நிலை உள்ளது.
அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை.எனவே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.அந்த பணியானது இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும்.அதன் பின்பு பள்ளியானது வழக்கம் போல செயல்படும்'' என தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '11.5 லட்சம் ரூபாய்..'.. 'ஆனா அந்த பெண்மணி இத செஞ்சுருக்கணும்'.. சென்னையில் பரபரப்பு!
- 'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'!
- ‘இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்..’ பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
- 'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'!
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- 'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்!
- 'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு!'... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- 'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'!
- 'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்!
- 'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!