'கொரோனா' நிவாரண நிதியாக.. 'தமிழக' முதல்வரிடம் 50 'லட்சம்' ரூபாய் வழங்கிய 'சென்னை' சத்தியபாமா நிகர்நிலை 'பல்கலைக்கழகம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம், 50 லட்சம் ரூபாயை சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது.

கொரோனா இரண்டாம் அலையானது, தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து, மேலும் ஏழை எளியமக்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பான பணியையும் செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மற்றும் பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு, கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தையும் வழங்கினர்.

தமிழக மக்களுக்காக நிவாரண நிதியை வழங்கிய சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழக நிர்வாகத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்