'வீட்ட தொறந்தா லட்சக்கணக்குல பணம், நகை...' 'ஆனால் ரோட்ல குப்பை சேகரித்து தெருவிலேயே வாழ்றாங்க...' என்ன காரணம்...? - அதிர்ச்சிக்குள்ளாக்கிய 3 சகோதரிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரத்தில் வாழும் 3 சகோதரிகளுக்கு 2,40,000 ரூபாய் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற நிலையில் இருக்கும் ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (60), மற்றும் மகேஸ்வரி என்ற பிரபாவதி (57) ஆகிய மூன்று சகோதரிகளும் சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் மூவரும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் வரும் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று சகோதரிகளில் இளையவரான பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இறந்துள்ளார். சாலையோரத்தில் இருக்கும் அவரின் சடலத்தை தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்தனர்.
அதைனையடுத்து ராஜேஸ்வரி மற்றும் விஜயலக்ஷ்மி வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரத்திலேயே தங்கி வந்துள்ளனர். இவர்கள் குறித்து விசாரித்த அப்பகுதி போலீசாரிடம், வீடு இருக்கு ஆனா அங்கே தூங்க முடியாது என கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த போலீசார், இருவரையும் கூட்டிக்கொண்டு அவரது சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் குப்பை மூட்டைகள் இருப்பதை கண்ட போலீசார் அதை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது தான் வீடு முழுவதும் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதையெல்லாம் எண்ணி பார்த்ததில் சுமார் 2,40,000 ரூபாய் கிட்ட இருந்துள்ளது. அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் ரூ.40 ஆயிரம் வரை இருந்துள்ளது. அத்துடன் 7 பவுன் நகைகளும் இருந்தது.
இதைக்குறித்து எந்த புரிதலும் இல்லாத மூதாட்டிகள் அதை பயன்படுத்தாமல் சாலையோரம் உணவிற்காகவும், தங்க இடம் இல்லாமலும் தவித்து வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். காவல்துறையினர் வீட்டை முழுமையாக சுத்தம் செய்த பிறகு பாட்டிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பின், பாட்டிகளுக்கு சொந்தமான நகைகளையும், பணங்களையும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- 'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை!'...
- 'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
- ஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி!.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''!.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு!.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா!'
- 'ஆபாச இணையத்தில் அமெரிக்க தொழிலதிபர் பார்த்த வேலை!'.. 'வாட்ஸ் ஆப் உரையாடல்களால்' 1,25,000 பவுண்டுகளைக் கறந்த பிரிட்டன் இளம் பெண்!
- 'கூகுள் பே-வுக்கு தடையா?'.. 'இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா?".. 'உண்மை என்ன?'
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- 'ஆன்லைன்ல எப்படிங்க வெங்காயம் வாங்குறது?'.. 'எதுக்குங்க?'.. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. உஷார்!