'சென்னையின்' அடிமடியிலும் கைவைத்த 'கொரோனா' வைரஸ்... என்ன பண்ண போறோம்னு தெரில... பயமா இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சென்னையின் அடிமடியான ரிச்சி ஸ்ட்ரீட்டிலும் கொரோனா தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டி விட்டது.

கொரோனா பாதிப்பால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சீனாவின் வியாபாரம் பெரிதும் அடிவாங்கத் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையின் பிரபலமான ரிச்சி ஸ்ட்ரீட்டிலும் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்ந்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது.

இந்த ஸ்ட்ரீட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் நாளொன்றுக்கு பொருள் வாங்க வருகை புரிகின்றனர். செல்போன், கணினி உதிரிபாகங்கள் ஆகியவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். கொரோனாவால் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

கையில் இருக்கும் பொருட்கள் வேகமாக விற்றுத் தீருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் வியாபாரிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். மற்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்தாலும் கூட, சரியான விலைக்கு சீனப் பொருட்கள் மட்டுமே கிடைப்பதாக வியாபாரிகள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து உள்ளனர். விரைவில் சீனாவில் நிலைமை சரியாகவில்லை எனில் இந்திய வியாபாரமும் பெரிதளவில் அடிவாங்கும் என்பதே கசப்பான உண்மை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்