‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா?..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியன் ரயில்வேயின் சென்னை மண்டலம் ஒரு எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூலை 17ஆம் தேதி ஆர்டிஐ-யின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்தியன் ரயில்வேயின் சென்னை மண்டலம், “கடந்த சில வருடங்களாகவே சென்னை ரயில்வே மண்டலத்தில் எலித் தொல்லையால் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வகையில் சேதங்களை ஏற்படுத்தி வந்த எலிகளை ஒழிக்க அதிகாரிகள் தொடந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எலிகளை ஒழிக்க 5.89 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2636 எலிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதில் 1715 எலிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும், 921 எலிகள் ரயில்வே பயிற்சி மையத்திலும் பிடிக்கப்பட்டுள்ளன. தோராயமாக ஒரு எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளது.

INDIANRAILWAYS, CHENNAI, CENTRAL, RAT, THOUSANDS, CRORES, MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்