'சுற்றுலா' சென்ற இடத்தில் பரிதாபம்... நண்பர்கள் கண்முன்னே... உயிரிழந்த 'சென்னை' மாணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பர்கள் கண்முன்னே சுழலில் சிக்கி தனியார் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் பிரிதம் சவுத்ரி (22). ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த இவர் தன்னுடைய நண்பர்களுடன் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் நண்பர்கள் அனைவரும் ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர்.
அப்போது பிரித்தம் சவுத்ரி ஆற்றில் நீந்தி சென்றபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி கொண்டார். அவரை, நண்பர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து நீரில் மூழ்கிய அவர் மரணமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பரிசல் ஓட்டிகள் உதவியுடன் பிரிதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அம்மாவ மண்ணைப் போட்டு மூடுனத பாத்தேன்’.. செப்டிக் டேங்க் அருகே தோண்டப்பட்ட குழி.. மகன் சொன்ன பகீர் தகவல்..!
- தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!
- ‘சிங்கிளா வீட்ல தங்குறது குற்றம்.. தெரியும்ல? எடுங்க ரூ.5 ஆயிரம் அபராதம்!’.. ‘உறையவைத்த சம்பவம்!’
- 'இதுக்குத்தான் என்ஜினீயரிங் படிச்சியா'?... 'கதறிய குடும்பம்'... பேஸ்புக்கில் இளைஞர் செய்த அட்டுழியம்!
- ‘கொரோனா’ பயத்தால்... போலீசாருக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘கணவர்’... மனைவிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- ‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்...
- 'சென்னையில் கல்லூரி மாணவியை’... ‘பாலியல் வன்கொடுமை செய்த’... ‘பிரபல நடிகரின் மகன் கைது’!
- வீட்டை எதிர்த்து 'காதல் திருமணம்' செய்த பெண்ணை... வேறு ஒருவருக்கு 'திருமணம்' செய்து வைத்த பெற்றோர்... தட்டிக்கேட்ட 'முதல் கணவருக்கு' நேர்ந்த விபரீதம்!
- 2,3 மாசமா இதே 'வேலையா' இருக்காரு... சென்னையில் இருந்து 'பறந்த' தகவல்... திருப்பூரில் 'சிக்கிய' பனியன் தொழிலாளி!
- ‘அவரு என் அப்பா தாங்க’... ‘உதவித் தொகை எடுக்க வந்தபோது’... ‘வழிதவறி மயங்கிக் கிடந்த முதியவர்’... ‘மனிதநேயத்தோடு செயல்பட்ட இளைஞர்’!