'இத மட்டும் ஏத்துக்கவே முடியல!.. கருணையற்ற கொரோனா'... சென்னையில் பரபரப்பு!.. தமிழகத்தை அதிரவைத்த தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைப்போல் அங்கு 7 செவிலியர் உள்பட 19 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கக்கூடியவர்களாக குழந்தைகள், ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என கருதப்படுகின்றனர். இந்த நிலையில், சென்னையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 100 கர்ப்பிணிகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-
சென்னையில் கர்ப்பிணி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும், ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணி பெண்களும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 கர்ப்பிணி பெண்கள் என, 204 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் நடந்துள்ளது. அந்த பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் தொற்று ஏற்படாத வகையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் 4 டாக்டர்கள், 7 செவிலியர்கள் மற்றும் 8 மருத்துவ பணியாளர்கள் என 19 மருத்துவமனை ஊழியர்களுக்கும் இதுவரை கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே சாதாரண 'வார்டில்' அனுமதிக்கப்படுவதே நோய் தொற்று பரவுவதற்கான காரணம் என செவிலியர்கள் தெரிவித்தனர். இதைப்போல் மேலும் மருத்துவ ஊழியர்கள் பாதிக்காமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைப்போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா 'வார்டில்' பணியாற்றும் செவிலியர்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு 7-வது மாடியில் தங்கியிருந்த 15 செவிலியர்கள் உள்பட 23 நர்சுகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பணியாற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடும்பத்தினர் 4 பேரும், மற்றொரு செவிலியரின் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதய நோய் பிரிவில் பணியாற்றிய 6 மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்!
- சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களை கொரோனாவிடம் இருந்து காப்பது எப்படி?.. வெளியான பரபரப்பு தகவல்!.. அடுத்து இரண்டு மாதங்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்!
- ஊரடங்கால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி!.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்!.. அலறும் போட்டியாளர்கள்!.. தெறிக்கவிடும் புதிய திட்டம்!
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது!.. பாதிக்கப்படுவோர் vs குணமடைவோர் எண்ணிக்கை... என்ன சொல்கிறது கொரோனா?
- தமிழகத்தில் இந்த '4 மருத்துவமனைகளில்' 'பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி...' 'தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்...'
- 'கொரோனா' தடுப்பு மருந்துக்கு சீனா வைத்த பெயர் 'Ad5-nCoV ' 'சார்ஸ்க்கும் இதுதான் மருந்து...' 108 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி...
- கொரோனாவுக்கு மத்தில 'இப்படி' ஒரு துயரமா?... 3 நோயாளிகள் 'உடல்' கருகி பலி!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'அமெரிக்காவில் படிச்சவங்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'H -1B விசாவில் வந்த அதிரடி மாற்றம்'... யாருக்கு லாபம்?
- 'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!