'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 'மூன்றாம் கண் திட்டம்' என்றால் என்ன?... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மூன்றாம் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னையில், சிறிய தெருக்கள் கூட கேமராவின் கண்காணிப்பில் இருக்கும் நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் (Automatic Number Plate Recognition) சென்னையில் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகை கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படம் எடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். மேலும், பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும். மிகத் துல்லியமாக படமெடுக்கும் வசதி என்பதால், வாகனங்களின் தெளிவான புகைப்படங்களை எடுக்கிறது. அதுமட்டுமின்றி, அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஓட்டுநரின் அடையாளங்களைக் கூட கண்டுபிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. காணாமல் போகும் வாகனங்களின் தகவல்களை கட்டுப்பாட்டு அறை மூலம் பதிவிட்டால், இந்த அதிநவீன கேமராக்களை வைத்து எளிதாக அடையாளம் காண முடியும்.

அந்த வகையில், குறிப்பிட்ட எண் கொண்ட வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அந்த வாகனத்தின் எண்ணை கட்டுப்பாட்டு அறைமூலம் பதிவிட்டால் போதும், சென்னையின் எந்த இடத்தில் அந்த வாகனத்தைக் கண்டாலும், கேமரா படமெடுத்து உடனடியாக அலெர்ட் செய்யும்.

போலீஸாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்கும் வாகனங்களை அடையாளம் காணுதல், தேடப்படும் வாகனங்களை கண்பிடித்தல் என பல்வேறு தேவைகளில் இந்த கேமராக்கள் மிகவும் பயனளிக்கின்றன.

இது குறித்து பேசிய சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், "சென்னைக்குள் ஒரு வாகனம் நுழைந்துவிட்டால் அந்த வாகனம் போலீஸாரின் கண்காணிப்பில் சிக்காமல் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வாகனங்கள் 76% கண்டுபிடிக்கப்படுகின்றன" என்றார்.

TRAFFICCOP, POLICE, CHENNAI, CAMERAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்