'அசுர வேகத்தில் சென்ற கார்'...'காண்போரை அதிரவைத்த இளம்பெண்கள்'...பதறவைத்த சென்னை இரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில், நேற்று நள்ளிரவு இளைஞர்கள் மற்றும் இரு இளம் பெண்களின் செயல் சென்னைவாசிகளை அதிர செய்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சாந்தோம் புனித தோமையார் பேராலயத்திலும் கொண்டாட்டம் களைக்கட்டியது. கிறிஸ்துமஸ் பிராத்தனை முடிந்து பலரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இது இரவில் வீடு திரும்பியவர்களை பதைபதைக்க செய்தது.

இதனிடையே காமராஜர் சாலையில் அசுர வேகத்தில் கார் ஒன்று சென்றது. அப்போது அந்த காரின் பின் இருக்கையில் இருந்த இரு இளம் பெண்கள் இருவர், பின்புற இருக்கையில் இருந்து வெளியே வந்து  கூச்சலிட்டு ஆடினார்கள். ஆபத்தான முறையில் இளம் பெண்கள் இருவரும் செய்த சாகசம் காண்போரை அச்சத்தில் உறைய செய்தது. மேலும் அந்த இரு பெண்களையும் போட்டோ எடுக்க  இளைஞர்கள் இருவர் காரை பின் தொடர்ந்து சென்றது காண்போருக்கு கிலியை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்த தகவல் குறித்து அறிந்த மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ் சங்கர் சஞ்சய் தலைமையிலான காவல்துறையினர் அதிவேகமாக பைக் ஓட்டிய 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் தேஷ் சங்கர் கொண்டாட்டங்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்றும் எதிர்வரும் புத்தாண்டில் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர்கள் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் மீறி பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

POLICE, TAMILNADUPOLICE, BIKE RACE, CHENNAI POLICE, KAMARAJAR SALAI, NAB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்