'பலரின் நீண்ட நாள் ஆசை'... 'போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சென்னை காவல் ஆணையர்'... அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கச் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராகக் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா காரணமாகப் பொதுமக்களின் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் கேட்கும் முறையைக் கொண்டு வந்தது, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதது. அதே போன்று சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போலீசாருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. போலீசாருக்கு முக்கியமான நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் இருப்பதே பெரும் மன குறையாக இருந்து வரும் நிலையில், காவல் ஆணையரின் இந்த அறிவிப்பு போலீசாருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வீட்டுக்கு வா.. கொரோனா நெகடிவ்னு ரிப்போர்ட் தர்றேன்!".. சுகாதார ஆய்வாளரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- VIDEO: 'கொல பட்டினியா இருந்துருக்கும் போல...' 'கார லாக் பண்ணல...' ஆடு செஞ்ச வேலைய பார்த்து ஷாக் ஆன போலீஸ் ஆபிசர்...' - வைரலாகும் வீடியோ...!
- 'என்னை சிதைச்சிட்டாங்கன்னு ஓடி வந்த பெண்'... 'தூக்கி வாரி போட வைத்த அதிகாரியின் ஒற்றை கேள்வி'... அதிர்ச்சி சம்பவம்!
- 'அழகான காலை.. அமைதியான சாலை'.. இமைக்கும் நொடியில் நிகழ்ந்த கோரம்.. உயிர் பலி.. படுகாயம்.. பொதுமக்களுக்கு நேர்ந்த கதி.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
- 'நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை!'.. நடிகை ராகினி திவேதி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு!
- ‘பெற்ற மகளைக் கடத்தி.. கட்டிவைத்து.. போதை மருந்து கொடுத்த கொடூர தாய்!’.. 'நடுங்கவைத்த' சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!
- 'காதல் மன்னனாக மாறிய கணவன்!'.. கூட்டமாக சென்று குமுறு கஞ்சி காய்ச்சிய மனைவி!.. 'புகார் அளித்த 4 பெண்கள்'.. பரபரப்பு சம்பவம்!
- கர்நாடகாவில் பரபரப்பு!.. டிஜிபி மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!.. கண் இமைக்கும் நேரத்தில்... அரங்கேறிய சம்பவம்!.. திக் திக் நிமிடங்கள்!
- ‘முகத்துல பிளாஸ்டிக் கவர் மாட்டி.. நடுரோட்ல நிர்வாணமாக்கி’.. 'சாத்தான்குளம்' சம்பவத்தை மிஞ்சும் 'டேனியல் ப்ரூட்' மரணம்!
- 'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!