"இவ்ளோ நாள் வெறும் வார்னிங் மட்டும்" ... "இனி தான் ஆக்ஷனே ஆரம்பம்" ... "சென்னை" மக்களுக்கு புதிய கட்டுப்பாடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனா வைரஸ் கட்டிற்குள் வராததால் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். முன்னதாக, நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். மேலும், இன்று முதல் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றவர்களிடம் 500 ரூபாய் அபராதமாக காவல்துறை வசூலித்து வருகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றாலும் அபராத தொகை வசூலிக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்