'என்னா மனுசங்க சார்'... 'சாப்பிட ஹோட்டல் இல்லாமல் சுத்திட்டு இருந்தேன்'... 'போலீஸ்காரர் செய்த உதவி'... நெட்டிசனின் உருக்கமான பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாப்பிட ஹோட்டல் இல்லாமல் அலைந்த நபருக்குச் சென்னை போலீசார் ஒருவர் செய்த உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதற்கிடையே கொரோனா தடுப்பு பணியில் மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுடன் காவல் துறையினரும் ஒருங்கிணைந்து, முன்களப் பணியாளர்களாகச் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், காவல் உயரதிகாரிகள் முதல், இரண்டாம் நிலை காவலர்கள் வரை ஆயிரக்கணக்கான போலீஸார் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனவை கட்டுப்படுத்துவதில் போலீசாரின் பங்கு என்பது அளப்பரியது. அந்த வகையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் போலீசார் ஒருவர் செய்த உதவி குறித்து பிரவீன் என்ற நபர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''நேற்று எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் கடினமான நாளாகும். எனது சகோதரரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அதற்கான வழிமுறைகளை முடித்து விட்டுத் திரும்ப மாலை 4 மணி ஆகி விட்டது. அப்போது மிகவும் களைப்போடு இருந்த நான் சாப்பிட உணவு கிடைக்குமா என ஹோட்டல்களை தேடிக் கொண்டிருந்தேன். நான் ஹோட்டல் கிடைக்காமல் அல்லல்படுவதைக் கண்ட ரமேஷ் என்ற காவல்துறை அதிகாரி பெரிய மேடு காவல்நிலையத்திலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தார்.

காவல்துறை அதிகரி ரமேஷின் இந்த செயல் என்னை நெகிழ வைத்து விட்டது. அவருக்கு எனது நன்றிகள்'' எனப் பதிவிட்டுள்ளார். தற்போது பொது முடக்கம் என்பதால் பலருக்கும் காவல்துறையினர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பசியோடு உணவுக்காக ஹோட்டலை தேடி அலைந்த இளைஞருக்கு போலீசார் செய்துள்ள உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்