சென்னை கல்லூரி மாணவர்களே..! மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கல்லூரி மாணவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்னை கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது தங்களுக்கு என ஒரு ‘ரூட் தல’ ஒருவரை நியமித்து அதை கொண்டாடுவது சென்னையில் ஒரு வழக்கமாக இருக்கிறது. இதுபோல் ரூட் தலைகள் நியமனம், கொண்டாட்டங்கள் கூடவே பல பிரச்னைகளும் மோதல்களும் வருகின்றன. வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே இதனால் பல பிரச்னைகளும் உருவாகிறது.

இனி வரும் காலங்களில் ‘ரூட் தல’ என்ற பெயரில் பிரச்னைகள் எழுந்தால் கல்லூரி மாணவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

இன்றும் கூட சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது போலீஸார் அங்கு வர மாணவர்கள் தெறித்து ஓடினர். இருந்தாலும் மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உயர்கல்வித் துறை செயலர் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதன் அடிப்படையில் ‘இனி ரூட்டு தல பிரச்னைகளில் ஈடுபடும் மாணவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்’ என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிகள் அது போன்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு சங்கர் ஜிவால் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, போலீஸ் கமிஷனர், சென்னை கல்லூரி மாணவர்கள், ரூட்டு தல, CHENNAI COLLEGE STUDENTS, CHENNAI POLICE COMMISSIONER, SHANKAR JIWAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்