"வெளிநாட்டுக்கு வேலைக்கு ஏஜெண்ட்-கிட்ட பணம் கொடுக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்க"..சென்னை காவல்துறை கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள், ஏஜெண்ட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "கணவருக்கு ஆண்மையில்லை".. சொந்த பந்தம் முன்னாடி பொய் சொன்ன மனைவிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி..!

திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனியார் டிராவெல்ஸ் நிறுவனம் ஒன்று உரிய அனுமதிகளை பெறாமல் இயங்கி வருவதாகவும், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

70 லட்சம் மோசடி

விசாரணையில், சதீஷ்குமார் அளித்த புகார் உண்மை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனடிப்படையில் போரூரை சேர்ந்த முகமது ரபி (52) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், அரசின் அனுமதி பெறாமல் அலுவலகம் நடத்தி வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி சுமார் 40 நபர்களிடம் ரூ.70 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான நியமன கடிதத்தை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது ரபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எச்சரிக்கை

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,"பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது சட்டத்திற்கு புறம்பானது. வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன்பு குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். ஏஜென்ட்கள் கொடுக்கும் டிக்கெட்கள் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மைதானா? என்று அறிந்துகொண்ட பின்னரே பாஸ்போர்ட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும். கடைசி நேரத்தில் இதுபோன்ற நபர்கள் அளிக்கும் விசாவை நம்பி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம். பயணத்திற்கு முன்கூட்டியே விசாவை பெற்று, சம்மந்தப்பட்ட குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி நம்பகத்தன்மையானதா என்று சரிபார்த்துக் கொள்ளவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | "வேலையைவிட்டு நிறுத்த போறிங்களா?".. ட்விட்டர் ஊழியர்களின் கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த நூதன பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?

CHENNAI, POLICE, CHENNAI POLICE COMMISSIONER, ADVICE, ABROAD, சென்னை, சென்னை காவல்துறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்