கணவர் இறந்துட்டாருன்னு போலீசுக்கு போன் செஞ்ச மனைவி.. எல்லாம் முடிஞ்ச அப்பறம் போனை செக் பண்ண போலீசுக்கு வந்த டவுட்.. வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மனைவியே கணவனை கொன்றுவிட்டு நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
சென்னையின் வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். 50 வயதான இவர் எலெக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகறாரில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி தனது கணவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்துவிட்டதாக வளசரவாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார் குமாரின் மனைவி.
சந்தேகம்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர் காவல்துறை அதிகாரிகள். இந்நிலையில், குமாரின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணாக அந்த பெண்மணி பதில் சொல்லவே, சந்தேகம் அடைந்த போலீசார் துருத்துருவி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்திருக்கிறது.
அதிர்ச்சி
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால் கணவரை கொலை செய்ததாக அந்த பெண்மணி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கின்றனர்.
விசாரணையில், அந்த பெண்மணியின் மொபைல் போனை காவல்துறையினர் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது வேறு ஒருவருடன் அந்த பெண் தொடர்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சென்னையில் தனது கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மனைவியை கொன்றுவிட்டு இறந்ததாக நினைத்து கணவர் எடுத்த திடுக்கிடும் முடிவு.. கடைசில தெரிய வந்த அதிர்ச்சி உண்மை.!
- "நான் மட்டும் அங்க போகலன்னா.." வற்புறுத்தும் கணவர்.. பதற வைத்த மனைவியின் புகார்..
- சென்னை மெட்ரோவில் நாளைமுதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..முழு விபரம்..!
- இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்.. வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிவிப்பு..!
- "இந்த போலீஸ்'க்கு ஒரு பெரிய சல்யூட்டே போடலாம்.." வண்டியை இழுத்துட்டு போன முதியவர் மனச குளிர வெச்ச போலீஸ்.. வாழ்த்தித் தள்ளும் நெட்டிசன்கள்
- தென்னந்தோப்பில்.. எரிந்து கிடந்த இளம்பெண்.. இரவில் கணவன் குடும்பம் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்.. திடுக்கிடும் பின்னணி
- மனைவியின் அக்காவையும் கல்யாணம் செஞ்ச கணவன்.. சந்தேகத்தால் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..3 நாளுக்கு அப்பறம் வெளியேவந்த உண்மை..!
- மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்.. அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம்.. உறைந்து போன கிராமம்
- "இது விபத்து இல்ல.. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க".. சிசிடிவி கேமராவால் போலீசில் சிக்கிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- "ஆக்சிடன்ட் மாதிரியே இருக்கணும்".. திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.!