அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.60 லட்சம்.. அசராமல் உருட்டிய இளைஞர்.. ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆன்லைன் மூலமாக இளம்பெண்ணிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆவடி பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது வாட்ஸாப் மூலமாக அவருக்கு பழக்கமாகிய நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாக உருட்டியிருக்கிறார். மேலும், தான் கூறும் நிறுவனத்துக்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேவை எனக்கூறிய அவர், இதன் மூலமாக வாரத்துக்கு 5000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைகாட்டியுள்ளார்.
வலை
இதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பெண், தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். அப்போது தனது முதல் வலையை விரித்த அந்த ஆசாமி முன்பணமாக 5000 ரூபாய் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். வேலை பெறும் ஆர்வத்தில் இளம்பெண்ணும் பணத்தை அனுப்பியிருக்கிறார். அப்போது அடுத்த வலையை வீசியிருக்கிறார் அந்த ஆசாமி. அதாவது அதிர்ஷ்ட குலுக்கல் திட்டம் ஒன்று இருப்பதாகவும் இளம்பெண்ணுக்கு அதில் 60 லட்ச ரூபாய் விழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அதற்கு முன்பணமாக 7.5 லட்ச ரூபாய் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து தனது நகைகளை அடமானம் வைத்து 6 லட்ச ரூபாய் வரையில் அனுப்பியிருக்கிறார் அந்த இளம்பெண். இதனிடையே தனக்கு விழுந்த 60 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்குமாறு பெண் கேட்கவே, அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார் அவர். மேலும், கூடுதலாக 5000 ரூபாய் பணத்தை செலுத்தினால் அவர் கட்டிய 6 லட்ச ரூபாயை திரும்பித் தருவதாக தெரிவித்திருக்கிறார்.
புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன் குமார் என்பவர் இந்த சதிவேலைகளை செய்துவந்தது தெரியவந்திருக்கிறது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த மதன்குமார் தலைமைறைவாகி இருந்த நிலையில், போலீசார் தற்போது அவரை கைது செய்திருக்கின்றனர்.
Also Read | "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரேநாள்ல 512 போன்கால்.. அதுவும் ஒரே பெண்கிட்ட இருந்து .. கடுப்பான காவல்துறை.. கடைசியா போன் பண்ணி அந்த பெண் சொன்ன விஷயம் இருக்கே..!
- புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"
- "என்னோட காஸ்ட்லி BAG-ல என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க".. முன்னாள் காதலன் மீது வழக்கு போட்ட இளம்பெண்.. பரபரப்பான நீதிமன்றம்..!
- இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?
- காதலியை மீட் பண்ண இளைஞர் போட்ட பிளான்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!
- ஒரே ஒரு Airpod-க்காக.. 7,000 கி.மீ தூரம் பறந்த இளைஞர்.. "செலவு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலயாம்.." காரணம் அறிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்
- "ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் சூடாவே இல்ல சார்".. போலீஸை அழைத்த இளைஞர்.. Spot'ல வந்து போன் பண்ணது யாருன்னு பாத்த போலீஸ்க்கு செம ஷாக்
- கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்.. காதலியை கரம்பிடித்த வாலிபர்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு..!
- "என்னை விட 10 வயது மூத்த பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க".. புது மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. பதறிப்போன உறவினர்கள்.!
- "ஊர்லருந்து வந்ததை வெளில சொல்லிடாதீங்க".. மாமனாரிடம் துபாய் ரிட்டர்ன் மருமகன் கொடுத்த பெட்டி.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. அடுத்தடுத்து வந்த ட்விஸ்ட்..!