20 வருடங்களாக தலைமறைவு.. இனி பிரச்சினை வராதுன்னு சொந்த ஊருக்கு திரும்பியவரை தூக்கிய போலீஸ்..மருத்துவர் மரண வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் சித்த மருத்துவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஏழேழு ஜென்மத்துக்கும் நீதான் என்னோட மனைவி".. சத்தியம் செய்த மாப்பிள்ளை.. நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

சென்னை தியாகராயநகர் ராகவய்யா சாலையில் வசித்து வந்தார் சித்தமருத்துவர் மலர்கொடி (67). இவர் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மரணமடைந்த மலர்கொடியின் சகோதரர் சித்த மருத்துவர் ஆனந்த குமார் (70) பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மலர்க்கொடியின் வீட்டில் தங்கி வேலை பார்த்துவந்த அழகர்சாமி என்பவர் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து மலர்கொடியை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்திருக்கிறது.

தலைமறைவு

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை தேடிவந்த காவல்துறையினர் அழகர்சாமி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ராமகிருஷ்ணன் தலைமறைவானதால் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தது காவல்துறை. இதனிடையே 2011  ஆம் ஆண்டு சித்த மருத்துவர் ஆனந்த குமார் மரணமடையவே, போதிய ஆதாரங்களை திரட்ட முடியாமல் அழகர்சாமி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் தலைமறைவான ராமகிருஷ்ணன் மீது தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அவரை தேடும்பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே வழக்கில் இருந்து அழகர்சாமி மற்றும் சக்திவேல் விடுவிக்கப்பட்டதை அறிந்துகொண்ட ராமகிருஷ்ணன், தைரியமாக சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கிறார்.

தூக்கிய போலீஸ்

இந்நிலையில், ராமகிருஷ்ணன் திண்டுக்கல் அருகே பதுங்கி பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருவதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்திருக்கின்றனர். சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராம கிருஷ்ணன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொலை நடந்த உடன் கேரளா சென்று வசித்துவந்த ராம கிருஷ்ணன், வழக்கு முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அப்போதுதான் காவல்துறைக்கு அவரை பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது அதிரடி திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Also Read | "நாய்க்குட்டி-ன்னு நெனச்சு தான் இதை தூக்கிட்டு வந்தேன்".. 2 வருஷத்துக்கு அப்பறம் தெரியவந்த உண்மை..வனத்துறை அதிகாரிகளிடம் உதவி கேட்ட பெண்..!

CHENNAI, POLICE, ARREST, போலீஸ், சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்